நான்
எதிர்பார்த்தபடி கவிஞக்கண்மணிகள் உளறிக்கொட்டி அதற்கான பலாபலன்களை கவிதைகள் மூலமாக
வைத்தார்கள். அகம் பிராமாஸ்மி…அவர்கள் இடும் சொற்கள் விமர்சகனின் மனிவி வரை இழுக்கும்
நிலைக்குச் சென்றுவிட்டது. இனி கோமாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த என் மனம் ஒப்பவில்லை.
இவர்கள் தொடர்ந்து நான் முன்னமே கூறியபடி மரம் மட்டை குளம் குட்டை கொக்கு குயில் இவைகள்
மேல் கருணை கொள்ளட்டும்….ஆனால் இவர்களின் அக்கறை தாங்கள் கவிஞர்கள் என்பதே…இருந்தொழியட்டும்.
கடந்த கால புத்தகங்கங்களைத் துடுப்பாக்கி இந்த கழிசடைக் கவிஞர்களின் சாக்காடையில் பயணிக்கவோவென…எனதுள்ளம்
பதறுகிறது…விடைகொடுங்கள்…கண்மணிகளே…இவர்களோடு பேச விழைந்த என் எண்ணத்தை நான் மனமுருகி
படித்த புத்தகங்களின் எழுத்தாளர்கள் தங்களது செறுப்பால் என் மூளையில் அடிக்கட்டும்.
அறுவெறுப்பு வக்கிரத்தைச் சுமந்தி செல்லும் பன்றிக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டேனோ என்பதே
இப்பொழுது என் அனுபவம்.
பெருகிறேன் விடை.
மலர்களை நாளும் மலரச் செய்ய
முயற்சிகள் பல செய்தேன்
பன்றிகள் தொழுவத்தில்
கட்டறுத்துப் பாய்கிறது
இனி மலர்கள் கருகி சாம்பலாகட்டும்…இனி
தீர்த்தமுனி மலையேறுவான்…
வான் கூட்டம் கலைத்து
பறக்கட்டும் பறவைகள்
…
அதன் பின் தீர்த்த முனி
முடிப்பான்…
தன் கணக்குகளை…
விடைகொடுங்கள் வாசகக்கண்மணிகளே…
என்னுடன் ஓரிரு வார்த்தைகள் விரிவாகப்பேசிய …திருவாளர்கள்
கிருஷ்ண பிரபு, பாலமுருகன், ப்ரியா, ப்ரியா செல்லம், பொன் வாசுதேவன், மனோ மோகன், வா.
மணிகண்டன், ஆத்மார்த்தி,. ரியாஸ் குரியானா, இசை, முருகன் ஆண்டிபட்டி, வேல் கண்ணன்,
ராம் சின்னப்பயல், கௌதம சித்தார்த்தன், ஞானி, நிஷா மன்சூர்,நிலா ரசிகன், நாட்டாமை, அமானுஷ்யபுத்திரன், ஆறுமுகம்
முருகேசன், மனோன்மணி புது எழுத்து,Ken Tvlm, ராஜ சுந்தரராஜன், லக்ஷ்மிப்ரியா பாண்டியராஜ்,பெரியசாமி
நடராஜன்,அபிலாஷ், அமிர்தம் சூர்யா, இடுகாட்டான் இதயமுள்ளவன்
இவர்களுக்கு மனம் கனிந்த
வணக்கங்கள்.
விடைபெறுகிறேன் தங்கங்களே
நாளைய தலைவர்களே…
நான் கிளறிய விமர்சன வரிகளை
உபயோகப்படுத்த நினைக்கும் கண்மணிகளுக்கு, அதை பிரதி செய்தோ இல்லை பாதுக்காத்தோ வைக்க
இன்னும் உங்களுக்கு ஏழரை மணிகளை நேரங்களை ஒதுக்குகிறேன்