Tuesday, 16 October 2012

நவீன கவிதையைப் புரிந்து கொள்ள.




நவீன கவிதையில் ஒழுங்கற்ற வாக்கிய அமைப்புகளின் மூலமாக சேதி சொல்லும் கவிஞர்களை நாம் கண்டுணர்வோம். தற்சமயம் அவர்களின் கவிதைகளில் தெரியும் மைய இழையின் புதிர்ப்பாதையை அவிழ்க்கலாம் வாசகர்களே. கவிதைக்கான கச்சாப் பொருட்களாக கவிதை இயங்கும் தளத்தை சற்று குறுக்காக வெட்டிப் பார்க்கலாம்.

முதலில்:
நவீன கவிதை தன் ஆரம்பவரியிலிருந்து இயக்கும் பொருட்களாக இவைகளே உள்ளது.கவிதையின் உள்ளார்ந்த அனுபவம் எழுதும் மனநிலைக்குச் சொந்தக்காரரானான ஒரு மனிதரின் மூளையிலிருந்தே பிறக்கிறது. தனிமனிதர் என இங்கு எவருமில்லையாதாலால் கவிதை பொதுவாகவே சமூகத்தன்மை கொண்டதாக இருக்கிறது..

கவிதையின் பாடுபொருளையும் அதன் உத்தியையும் பொறுத்து நவீன கவிதையின் ஏழு கோணங்கள் அல்லது கோணல்கள்.

1 வக்கிரம், இருண்மை, படிமம்

2 முழக்கம், அரசியல், ஆரவாரம்,

3 சமூகவுணர்வு, விமர்சனம், சமூக மாற்றம்

4 தனிமனிதக் கழிவிரக்கம், நம்பிக்கை வறட்சி, அந்நியமாதல்

4 மிதப்பு, நழுவல். எதிலும் ஒட்டாப்பண்பு

6 பாசாங்கு அறியாமை, வெகுளித்தனம்

7 தன்முனைப்பு அகங்காரம் அலட்சியம்


கவிதையின் மொழித்தளம் என்பதைப் பொறுத்த அளவில்  கவிதைப் பரப்பில் விளையாடும் சதிர்கள்

1. சொற்களைச் செதுக்குதல், வடமொழிச் சொற்களை வலியத்திணித்தல்.

2 .வரிகளை அடுக்குவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும்
   வித்தியாசங்கள்,  கவனமும் கவனமின்மையும்.

3 . விடுகதைப்பாணி, திடீர்ச்சுழற்சி,

4 . படிமங்கள், உருவகங்கள், தொன்மங்க.ள்

5. உரைநடையின் நேரடித்தாக்கம்.

6 சந்தம், நாட்டுப்புற பாடலின் சாயல்.


இதுவே நவீனம் எனச் சொல்லி கவிதைகள் தன் வார்த்தைகளுக்குள் ஒளித்துவைத்துள்ள உணர்ச்சிகள். இவைகளை வைத்து கோலி விளையாடும் கவிதைகளை நாம் உணரமுடியும்.  இவைகள் குறித்து வாசகர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

பிள்ளைப் பாசம்,
தாய்ப்பாசம்,
இயற்கையை வருணித்தல் என இன்னும் சில சுமைத்தாங்கிக் கவிதைகளையும் கவிஞர்கள் ஆற்றிவருகிறார்கள். விலை போனவைகள், விற்பவைகள் என நிறைய கவிஞர்கள் எழுதியும் வருகிறார்கள். கவிதையின் தன்மைகள் குறித்து வாசகர்கள் சற்றே உரத்த சிந்தனையோடு  சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிட்டுள்ள உணர்ச்சிமையங்களைத் தாண்டி ஒரு கவிதை இயங்குமாயின் அது குறித்து  நாம் சற்று கவனமாகப் பேசுவோம் கண்மணிகளே.

சிந்திப்போம் கண்மணிகளே….

Monday, 15 October 2012

முகநூல் கவிஞர்களின் சுயரூபம்.




வாசகக் கண்மணிகளே.... வந்த சில நாட்களாய் நான் எழுதியது முகநூல் கவிஞர்களின் கவிதைகளுக்கு நான்கு கவிதைகளுக்கு விமர்சனம். அடியேன் செய்தது அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் நான் வேறெதுவும் செய்யவில்லை. ஆனால் முகநூல் கவிஞரய்யாக்கள் எனக்குச் செய்தவைகள் இவைகள்.

1 வா. மணிகண்டன் கொசு என்றார்,

2 ஆத்மார்த்தி நான் தவறாக கவிதைகளைப் பார்க்கிறேன் என்றார். பதிலுக்கு இன்னும் விளக்கம் சொல்லவில்லை. அது தண்ணீருக்குள் விட்ட குசுவாகவே இருக்கிறது.

3 நிலா ரசிகரய்யாவை ஆளையே காணவில்லை

4 அய்யப்ப மாதவன் பெட்டைப் பயலே என்றார். எனது படுக்கயறைக்குள் நோட்டமும் விட்டார்.

5 வேல்கண்ணன் பிணி என்றார்.

இவர்கள் அனைவருக்கும் எனது விமர்சனக் கனிவான வணக்கம்.

என்ன கொடுமை அய்யா இது... உங்கள் கவிதைகளை விமர்சனம் செய்தால் இதுதான் பதில் விமர்சனமா....இது போதாதென்று அய்யா சிபிச்செல்வன் ஈமு கோழி, குதிரை என்று ஏதோ உளறியதோடு தீர்த்தமுனியை இந்தா நெருங்கிவிட்டேன் அந்தா நெருங்கிவிட்டேன் என்றார். அய்யா அவருக்கு பதில் வைத்தும் அது காணாமல் போய்விட்டது. இதுவெல்லாம் போதாதென்று ஏதோ வயிற்றுக்கடுப்பு வந்தவன் வெளியூர் சென்று கழிவறை தேடி அலைந்த கதையாய் எனக்கு கவிதை வந்தது என்று குமுறிக்கொண்டிருக்கிறார். நான் இவர்களை பொருட்படுத்தினேன். நாளையக் கவிக் கண்மணிகள் என எண்ணி எழுதினேன். ஆனால் அது காமெடியாகிவிட்டது. நான் யாரிடம் உரையாடியிருக்கிறேன் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது செல்லங்களே...

வாசகக்கண்மணிகளே...இதுவரை எனது முக நூல்கணக்கு இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டுவிட்டது. ஹேக் செய்வது எப்படி என எனது விமர்சனத்துக்கு பதில் சொல்லாது கம்மென்றிருக்கும் தங்கங்கள், செல்லங்கள் வைரக்குட்டிகள் அறிவார்கள்.


நான் கவிஞராக்கும் என்று கொந்தளித்துக் குமுறும் இவர்களின் அன்பு மனம் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன். அதிலும் இந்த அய்யப்ப மாதவனய்யா அவர்கள் பெட்டைப்பயல், செறுப்பென்று உளறியதோடு இப்பொழுது நான் புணர்ந்த பின் பெண்ணென்பவள் யார் என்கிற உலகத்தத்துவத்தை உச்சுக்கொட்டிச்  சொல்கிறார். பார்க்க பார்க்க பரிதாபமாக இருக்கிறது கண்மணிகளே. அவர் பக்கங்களெங்கும் கவிஞர்கள்தான் நாளைய உலகை ஆளவேண்டும் எழுதும் கரங்களே எனப் பாடலைப் பாடி மற்ற அனைவரையும் தண்டங்கருமாந்திரங்கள், நாசமாப் போய்ச் சாகட்டும் என்கிறார். அவரது அன்புக்கவியுள்ளம் கண்டு நொந்தேன் நான். நான்கு விமர்சனங்களிலேயே முகநூல் கவிஞர்களின் கொந்தளிப்புகளை சரியாக சுட்டியுள்ளேன் என நினைக்கிறேன். கீழே வாசக்கண்மணிகள் காணுவது அய்யாச் சிபிச்செல்வன் கவிதை எழுதும் தருணமாய் எழுதியதற்கான விமர்சனம்.


கவிதை எழுதுவதும் ஈமுக் கோழி வளர்ப்பும்

கவிதை எழுதும் தருணமாக அய்யா சிபிச்செல்வன் உளறியது எனக்கு ஏகக் கொண்டாட்டத்தை இனிப்புடன் வழங்கிவிட்டது. திரைப்பட பில்டப்புகளை நினைவில் கொண்டுவந்தது. அந்த பில்டப்புகளையே நான் காமெடி நடிகர்களுக்கு இசையென வழங்கும் டொய்ங் என்ற சப்தமாக மாற்றியிருக்கிறேன்.

கவிதையியல் கவிதை எழுதும் தருணம் என்ற தலைப்பில் கவிஞரென்று சொல்லிக்கொள்ளும் கவிஞரய்யா சிபிச்செல்வன் தனக்கு கவிதை வந்த அனுபவத்தை அருமையாக எழுதியிருந்தார். படித்தேன். அவரின் உரையாடல் முழுக்க தான் கவிதைதான் எழுதப்போவதாக நம்பிக்கொண்டு வீட்டுக்கு வேகமெடுத்து ஓடியுள்ளார். நல்ல வேளை தடுக்கிவிழவில்லை. கொதிநிலையில் வெடிக்க தயாராக இருக்கும் பிரஷர் குக்கர் போல அவரது உடல். மனம் ஏனைய உடல் உறுப்புகள் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது.

இது போன்ற விஸ்தீரணங்களை கவிஞரய்யா கவிதை எழுதும் தருணத்தில் அடைந்திருக்கிறார். இதை வியாக்கியானமாக அவரை எழுதத் தூண்டியது எது என்பதை ஒரு சிற்றறிவுக்கெட்டிய உளவியல் சார்ந்த கேள்வி பதில்களாக முன்வைத்துப் பார்க்கலாம்.


1 ஒரு கவிதையை எழுத இவ்வளவு அவஸ்தையா?

                          ஆம் கவிப்பொழுது சும்மாயில்லை. ஆண்டு, அகன்று செரித்து உள் நுழைந்து குமுறிவரும் கொந்தளித்து ஒருக்களித்து புரண்டு படுத்து, கோட்டுவாய் கோட்டை உடைக்கும் ஒரு பயங்கர ஆற்றல். அது எல்லோருக்கும் வந்துவிடாது, இத்தகு அவஸ்தைகளோடு எழுதினால்தான் அது கவிதை. அதுவும் அது கவிதையாகத்தான் இருக்கும் என முடிவு கட்டிவிடலாம்.

2 அப்படியென்றால் நோய் முற்றி உயிருக்குப் போராடும் நோயாளி எழுதித்தரும் மாத்திரைச் சீட்டும் கவிதைகளா?

                           ஆமாஞ்சாமி. அது கவிதையேதான் அப்புறம் என்ன சும்மாவா. அட்ய்ஹு கவிததான். ஆனால் மருந்துகளுக்கிடையில் தனிமை வெறுமை கொலுசு, மழை என்ற நாலைந்து வரிகள் இருக்கவேண்டும். இருந்தால் சாகும்போதும் கவியெழுதிய கவிச்சித்தர் என அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்து முடித்து விடலாம்.

3 கவிதை எழுத கவிஞரய்யாவுக்கு, அதன் இனந்தெரியாத மனவலி, பரபரப்பு, பிரஷர் குக்கர் கொதிநிலை, தடுமாற்றம், வருடங்களாகத் தடைபட்டிருந்த தருணம், குட்டிப் போட்ட பூனையாக அவஸ்தைப்பட்ட மனம் இதையெல்லாம் கவிதை எழுதுவதற்கு தேவையா?

                             ஆம். ஒரு கவிதை எழுதுவதும் பிள்ளை பெறுவதும் ஒன்றுதான் என கவிஞர்களே சொல்லுகிறார்கள், இத்தகைய அவஸ்தை வந்தால் ஏதேனும் ஒரு புத்தகத்தை…ஆனால் நீங்கள் பல்லாயிரக்கணக்காக வருடங்களாய் தேடும் ஒரு புத்தகமாய் இருந்தால் இன்னும் விரிவாக கவிதை வரும்..

ஒரு நபர், அவரைக் கவிஞரய்யா என்றே சொல்லலாம். அத்தைகைய ஒரு கவிஞரய்யா தனது நண்பரைத் தேடி ஒரு சிற்றூருக்கு வருகிறார். பேருந்து விரைந்துகொண்டிருக்கும்போது அவருக்கு இனம் புரிந்த ஒரு அவஸ்தை வருகிறது. பேருந்தோ மிக மெதுவாய் போய்க்கொண்டிருக்கிறது. கவிஞரய்யாவுக்கு உடல் சூடாகத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பிடித்தால் கொல்லன் காய்ச்சிய இரும்பைப் போல கொதிக்கத் தொடங்கிவிடும். சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிற்றூருக்கு செல்லும் ஒரே ஒரு பேருந்தாகையால் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது. ஒரு தொந்தி நிறைந்த வயிற்றுக்காரன் கவிஞரய்யாவின் தோளில் தனது எடையை இறக்குகிறான். ஏற்கனவே கூடியிருந்த அழுத்தம் இப்பொழுது கவிஞரய்யாவுக்கு இன்னும் கூடியது, இப்படியே இருந்தால் பிரளயம்தான் என நினைத்து அங்கும் இங்கும் பார்க்கிறார். தனது கவனத்தை பின்னோக்கிச் செலுத்துகிறார். தனது கவிதைத் தொகுதிக்கு வெளியூரில் மஞ்சள் சால்வை போர்த்தி கைதட்டிய நினைவுகள் வருகிறது. ஆனாலும் கவிஞரய்யா மனம் பதட்டத்துடன் நிகழ்காலத்திற்கு அவரை இழுத்து வருகிறது. மனம் தாளமுடியாத சுமையும் அழுத்தமும் அதிகமாகிப் போய்க்கொண்டேயிருக்க தாங்க முடியாத அவஸ்தையுடன் எழுந்து நிற்க, ஆள் எழுந்துவிட்டார் என அருகில் இருந்த முதியவர் அமர்ந்துவிட்டார். கவிஞரய்யாவோ அவஸ்தையை சற்று தள்ளிப் போடத்தான் எழுந்து நின்றார். ஆனாலும் பரவாயில்லை நிற்பது சற்று லகுவாக இருக்கிறது என நினைத்த அடுத்த விநாடியில் சகலமும் பறிபோகும் ஒரு மனநிலைக்கு கவிஞரய்யா வசமிழந்தார், கால்களை இறுக்கி கோணாலாக்கி எவ்வளவோ பொருத்தப்பாடுகளில் நின்று கொண்டிருக்க ஒரு வழியாக பேருந்து வேகத்தடையை தடையேதும் இல்லாமல் கடக்க தூக்கிப் போடப்பட்ட பேருந்துக்குள்ளிருந்த கவிஞரய்யாவுக்கு உள்ளே ஏதோ வெடித்துவிடுவதைப் போல அவஸ்தை கூடியபடியே வந்தது. வேகமாக பேருந்தை நிறுத்தச் சொல்ல நடத்துனர் இந்தா வந்துருச்சுங்க என்க கவிஞரய்யா கடுங்கோபத்தோடு அவரைப் பார்த்தார். இடை நிறுத்தம் வரவும் கவிஞரய்யா வேகமாக இறங்க நினைத்தும் அங்கேயும் போட்டி நிலவியதால் மனம் இன்னவெனத் தெரிந்த நடுக்கத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழித்து ஒரு வழியாக இறங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்த பால்ய நண்பன் நின்றுகொண்டிருந்தான். கவிஞரய்யா என ஆசை பொங்க நண்பர் அழைக்க  கவிஞரய்யாவோ எதுவும் பேசும் மனநிலையாது வா என கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார், அவரது மனம் இப்பொழுது கிட்டத்தட்ட பிரஷர் குக்கரைப் போலவே இருந்தது. விழுந்தடித்துக்கொண்டு வந்த கவிஞரய்யா வேகமாக கழிவறைக்குள் வந்தார். கதவு தாழிடுதல் கூட இரண்டு நிமிடங்கழித்தே நடந்தது. கொதி நிலை அவஸ்தை பிரஷர் குக்கர் எல்லாம் இலகுவாக இளகியது மனப்பதட்டம் தணிந்தது. கவிஞரய்யாவின் காகிதங்களில் ஈமுக்கோழிகள் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. மிக மெதுவாக வெளியே வந்தார். கவிதை குறித்து சிந்தித்தார்.



Thursday, 11 October 2012

அய்யா ஆதிரன் அவர்களுக்கு....





 அய்யா ஆதிரன் அவர்களுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.


நான் யாரைத் தீர்த்த முனி..

முக நூல் கவிஞர்களின் கட்டுப்பட்டித் தனமான அகந்தையை நோண்டிவிட்டதற்காக. விமர்சனம் என எதையும் தாங்கவொண்ணா அவர்களின் பலவீனத்தையும் அதன் மூலமாக அவர்களது பயங்கரவாதத்தனத்தை எடுத்துக்காட்டியதற்கும். அய்யா இவற்றையும் சில ஊளைகளையும் தீர்த்து உம் கேள்வியில் உள்ள சந்தேங்களைத்தீர்க்க வந்த, சற்றும் அதிகமாகத் தீரத் தெரிந்த தீர்த்தமுனி.

1 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்

2 நீங்கள் கவிஞரா?
ஆம்

3 அல்லது இரண்டும் கலந்த பிறவியா?
ஆம்

4 நீங்கள் வாசகரா?
ஆம்

5 நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல இந்த கேள்விகள். நான் பதில் சொல்வதற்கு.
இருந்தாலும் பரவாயில்லை அய்யா, பதில் சொல்லியிருக்கிறேன்.

6 நீங்கள் கவிதை விமர்சகரா?
ஆம்.
அய்யா எழுதிய கவிதைக்கு கவிஞரே உளறுவாய்த்தனமாக கோனார் நோட்ஸ் போடுகையில் இப்படி ஆகிவிடுகிறது. ஆரம்பத்திலிருந்து கவிதையை உணரத்தோதான சில குறியீடுகளைச் சொன்னேயொழிய கவிதை இதுதான் எனச் சொல்லும் முக்காலம் உணர்ந்த முனியல்ல இந்தத் தீர்த்தமுனி.
அய்யா கவிதையை எது கவிதையாக தீர்மானிக்கிறதோ அந்த தன்மையிலிருந்தே நான் உரைகல்லை உருவாக்குகிறேன். உரைகல்லும் உராசும் பொருளும் கவிதையிலேயே இருக்கிறது. மார்கிசிய உரைகல் என்பதை பாசாங்காகக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஒரு காரணமாய் தங்களை இத்தனை கேள்விகள் கேட்கவைத்த அந்த உரைகல்லை தீப்பொறிபறக்க உரசிப்பார்க்கலாம். இல்லை அண்டாக்கா கசம் அபூக்கா குசம் என பாறாங்கல்லை உருட்டியும் பார்க்கலாம்.


கடற்கன்னி.

அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
நிர்வாணமாக அவள் நுழைந்த போது
அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன
சப்தமின்றி அவள் வெளியேறினாள் கடைசியில்
அந்தக் கதவு வழியாக
நதியைச் சென்றடையுமுன்னரே
அவள் தூய்மையாகிவிட்டாள்
மழியில் நனைந்த வெள்ளைக் கல் போல
மீண்டுமொருமுறை
மின்ன
நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
சூன்யத்திற்குள்
அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.

அய்யா இக்கவிதையை நீங்கள் விமர்சனத்துக்கு அடியில் வைத்துத் தேய்த்த உரைகல் இப்படி வாழைப்பழத் தோலாக மாறக்கூடாது. அய்யா அந்த சிறுவர்களின் கவிதைகளை சிறு கேள்வி கேட்டதற்கு, உரைகல் லோடை ஏற்றி வந்த உங்களது லாரியை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். அய்யா….அந்தக் கவிதை…அதுதான் அந்த கடல் கன்னி. அய்யா இங்கு ஒரு ஜிக்ஜாக் உள்ளது. இந்தக்கவிதையில் உள்ள ஜிக்ஜாக் ஒரு வாசகக்குசும்புக்கு விடப்பட்ட சவால் அய்யா. ஒரு கேள்வி எனத் தொடங்கி எனது விளக்கங்களைச் சொன்னதும் அவர்கள் குந்திக் குமுறி, என் இல்லக்கிழத்தி வரை கவிதையைத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். அய்யா அந்த ஜிக்ஜாக்கையும் நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கவிதையின் முழுத்தலைப்பு இதுதான். கடல்கன்னி குடிகாரர்கள் கதை. கவிதையை எளிமையாக எழுதாமல் பு- நாவுக்கு பூனாப் போட்டு சூ நாவுக்கு சூனாப் போட்டு எழுதியது  தீர்த்த முனியல்ல. இன்றளவும் பொங்கிவரும் காவேரியாம் திருவாளர் பாப்லோ நெரூதா வுடையது. அய்யா இந்தக் கோமாளிக் கூத்துக்களுக்கு நெரூதாவை உடைத்துப் போடும் நீர் யார் பெருங்கோமாளியா அய்யா. சிந்திக்கும் செயலை எழுதியப் பெண்மணியைத் தேடிய நீர், சிந்த்திப்பவனின் குதத்தைக் குறிவைக்கும் கவிஞக்கண்மணியையும் தேடிப்பார்த்திக்கலாம்,. அய்யா யப்பானிய வடிவமான ஹைகூ விற்கும் வெண்பாக்கள் போல இலக்கணம் உண்டு என்கிற ராஜசுந்தர்ராஜனுக்கும் நேரடி பதில் இருக்கிறதென்றால் இருக்கிறது. கேட்டால் கொஞ்சம் வெட்கமாக இருக்கும் பரவாயில்லையா… அய்யா வெண்பா ஒரு கற்றுக்கொள்ளும் திட்டம் என்றால் அந்த வெண்பாவுக்கும், பொங்கலுக்கும் உரைகல் இலக்கணம் என்றால் கவிதைக்கு அங்கு என்ன உரைகல் என்று  கேட்டிருக்கலாம். பெரியவர். ஏதோ ஹைகூக்கு இலக்கணம் இருக்கிறதென்றால் இங்குள்ள கவிதைகளுக்கு இலக்கணம் எதுவய்யா. நேரடியாக உங்களுக்குப் பதில் தந்துவிட்டேன். நீங்கள் அங்கு சென்று உசாவலாம்.

//படிக்கிற கவிதையின் படைப்பாளியின் அனுபவத்தை ஒரு வாசகர் நேரடியாக பெறும்பொழுது அவருக்கு கவிதை மீதான விமர்சனம் தேவையற்றுப் போகிறது.//

 அய்யா இது அப்படியா அய்யா. இல்லை அய்யா இது அண்டப்புளுகுணிகள் ஆகாசப் புளுகுணிகள் தாங்கள் மட்டுமே புரிந்துகொண்டதாக உளறிவைத்த வேலை. இன்னும் சொன்னால் பெருந்திட்டமய்யா பெருந்திட்டம்.

அய்யா…கவிதைக்கூறில் ஏகப்பட்ட நுழைபுலன்கள் உள்ளதய்யா கவிதையை அணுக நாம் கொள்ல வேண்டியதென பல உள்ளதய்யா. ஏனென்றால் கவிதை தன்னளவில் பெரும்பேறு கொண்டதல்லவா,

அய்யா….கவிதையை அணுக நாம் கைக்கொள்ள வேண்டிய முறைகளாவன…

விளக்க முறை
ஒப்பீடு
மதீப்பீடு
ரசனைமுறை
பாராட்டு முறை
முடிபுமுறை
விதிமுறை
படைப்பு நிலை
பகுப்பு நிலை

இவைகளோடு
அதை ஆய்ந்தகன்று உள் செல்ல
சமுக வய
இன்னும் வரலாற்றிய
உளவியல் முறையிலான அதற்கடுத்து
மொழியியல் அணுகுமுறையோடு
கவிதையின் உருவவியலோடு,
அதன் அமைப்பியலோடு, பின்னதாக வந்த பின்னை அமைப்பியலோடு, பின் நவீனத்தோடு
அறநெறிச்சாரத்தின் மையத்தோடு
தொல்படிவ அணுகுமுறையோடு
இலக்கியவகையியலோடு
இன்னும்
தத்துவத்தோடு
இப்பொழுது நொங்கெடுத்து சில பலரைக்
கிண்டிக் கிழங்கெடுக்க வந்த
சமகால தலித் மரபோடு

உங்களது பாணியில் காமெடியாகச் சொன்னால் மார்க்சிய இயங்கியலோடும் உரைத்துப் பொருள் கூறலாம். ( இங்கேயும் சிக்கல் உள்ளது. எச்சரிக்கை.)

மாபெரும் முனிகளான தெரிதாவும் பூக்கோவும் சசூரும் பைத்தியங்கள் இல்லை அய்யா, மொழிக்கு வைத்தியம் பார்க்க வராது வந்த மாமுனிகள்..

பாட்டு நினைவுக்கு வருகிறதா
ஒன் டூ த்ரீ…ஸ்டார்ட்…

பிரெஞ்சு மலை மாமுனியே தெரிதா ய்யா
சார்த்தரின் குணங்க்காக்கும் பூக்கோய்யா
நீட்ஷேயா..யீய்யா
பிரெஞ் மலை மாமுனியே சார்த்தரையா…

பூக்கோவின் குங்குமம்
தெரிதாவின் சந்தனம்
ஜகஜகஜகஜகஜகஜக…

சார்த்தரின் இருத்தலில்
தெரிதாவின் சம்பட்டியில்

அய்யா நினது திருவடி சரண்புகவே
மார்க்சய்யா
அய்யா…


அந்தக பாப்லோ நெரூதா கவிதையை மொழிபெயர்த்ததில் எந்தச் சிக்கலும் இல்லை அதையும் கண்டுபிடியுங்கள். விளக்கம் கேட்டு நீங்கள் வெட்டிய அனுப்பிய பகுதிகள் எல்லாம் இதை விளக்கி எழுதியபோது வந்ததுதான் இது…இன்னும் விளக்கித்தான் உங்களுக்குப் புரியவேண்டுமெனில். நீங்கள் கவிதை எழுதாமல் கவிதைகளைப் படிப்பது மூன்ரு வேளைக்கு ஒரு வேளை உத்தமம்.
பெயரைக் கேட்டு ஒரு கேள்வி. அய்யா பெயர் எப்பொழுதும் பெரும் பிரச்சினை அய்யா. அதில் வேறொன்றுமில்லை விமர்சனம் எழுதிவைத்தால், இவன் எனக்கு மாமன், இவன் எனக்குச் சித்தப்பா, இவன் எனக்கு ஒன்றுவிட்ட பெரியப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை மகன் எனச்சொல்லி அந்த உரைகல்லை உடைத்து கவிதையைப் பதம் பார்த்துவிடுகிறார்கள். அதனால் என்னை முன்வைப்பதில் சிக்கல்கள் பல உள்ளது. ஏற்கனவே நான் கேட்டுச் சலித்து பதில் வராத கேள்விகள் கீழே அய்யா..

1 சிறு கேள்வி கேட்டாலே கவிஞக் கண்மணிகள் தொடை வழியே குதம் வழியே வழியவிடுவது எது.?

2 விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் கழிந்து வைக்கும் வார்த்தைகள் எந்த மணத்தோடு ஒத்துப் போகிறது.?

3 சக கவிஞருக்கு வக்காலத்து வாங்க வருபவரும் ஒரு கவிஞராய் இருப்பது ஏன்?

விமர்சனத்தில் எங்கு பிழையுள்ளது எனக் கேட்காத தாங்கள் என்னிடம் கவிதைக்கு விளக்கம் கேட்டதே எனக்கு இப்பொழுது பெரிய விசயமாய் இருக்கிறது. நீங்களாவது என் குடும்ப நலத்தை கேட்காமல் இருந்தீர்களே.அந்தளவுக்கு விஷேசம்.

அய்யா எனது தளச்செயல்பாடுகளை வெட்கப்பட்டு மூடிவிட்டேன். முடிந்தால், உங்களுக்குத் தளமிருந்தால்.. இதைப் பகிரலாம்.
தொடர்ந்து உரையோடுவோம் ஆதிரரே.

பூக்கட்டும் திசையெங்கும் மலர்கள்
வீசட்டும் வாசம் எங்கெங்கும்.

அய்யா வணக்கம்….
அன்பிற்குரிய மனங்கனிந்த
-       தீர்த்த முனி


Sunday, 7 October 2012

வாசகக் கண்மணிகளே…




நான் எதிர்பார்த்தபடி கவிஞக்கண்மணிகள் உளறிக்கொட்டி அதற்கான பலாபலன்களை கவிதைகள் மூலமாக வைத்தார்கள். அகம் பிராமாஸ்மி…அவர்கள் இடும் சொற்கள் விமர்சகனின் மனிவி வரை இழுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. இனி கோமாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த என் மனம் ஒப்பவில்லை. இவர்கள் தொடர்ந்து நான் முன்னமே கூறியபடி மரம் மட்டை குளம் குட்டை கொக்கு குயில் இவைகள் மேல் கருணை கொள்ளட்டும்….ஆனால் இவர்களின் அக்கறை தாங்கள் கவிஞர்கள் என்பதே…இருந்தொழியட்டும். கடந்த கால புத்தகங்கங்களைத் துடுப்பாக்கி இந்த கழிசடைக் கவிஞர்களின் சாக்காடையில் பயணிக்கவோவென…எனதுள்ளம் பதறுகிறது…விடைகொடுங்கள்…கண்மணிகளே…இவர்களோடு பேச விழைந்த என் எண்ணத்தை நான் மனமுருகி படித்த புத்தகங்களின் எழுத்தாளர்கள் தங்களது செறுப்பால் என் மூளையில் அடிக்கட்டும். அறுவெறுப்பு வக்கிரத்தைச் சுமந்தி செல்லும் பன்றிக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டேனோ என்பதே இப்பொழுது என் அனுபவம்.

பெருகிறேன் விடை.
மலர்களை நாளும் மலரச் செய்ய
முயற்சிகள் பல செய்தேன்
பன்றிகள் தொழுவத்தில்
கட்டறுத்துப் பாய்கிறது

இனி மலர்கள் கருகி சாம்பலாகட்டும்…இனி தீர்த்தமுனி மலையேறுவான்…
வான் கூட்டம் கலைத்து
பறக்கட்டும் பறவைகள்


அதன் பின் தீர்த்த முனி
முடிப்பான்…
தன் கணக்குகளை…

விடைகொடுங்கள் வாசகக்கண்மணிகளே…

என்னுடன்  ஓரிரு வார்த்தைகள் விரிவாகப்பேசிய …திருவாளர்கள் கிருஷ்ண பிரபு, பாலமுருகன், ப்ரியா, ப்ரியா செல்லம், பொன் வாசுதேவன், மனோ மோகன், வா. மணிகண்டன், ஆத்மார்த்தி,. ரியாஸ் குரியானா, இசை, முருகன் ஆண்டிபட்டி, வேல் கண்ணன், ராம் சின்னப்பயல், கௌதம சித்தார்த்தன், ஞானி, நிஷா மன்சூர்,நிலா ரசிகன், நாட்டாமை, அமானுஷ்யபுத்திரன், ஆறுமுகம் முருகேசன், மனோன்மணி புது எழுத்து,Ken Tvlm, ராஜ சுந்தரராஜன், லக்‌ஷ்மிப்ரியா பாண்டியராஜ்,பெரியசாமி நடராஜன்,அபிலாஷ், அமிர்தம் சூர்யா, இடுகாட்டான் இதயமுள்ளவன்

இவர்களுக்கு மனம் கனிந்த வணக்கங்கள்.
விடைபெறுகிறேன் தங்கங்களே
நாளைய தலைவர்களே…

நான் கிளறிய விமர்சன வரிகளை உபயோகப்படுத்த நினைக்கும் கண்மணிகளுக்கு, அதை பிரதி செய்தோ இல்லை பாதுக்காத்தோ வைக்க இன்னும் உங்களுக்கு ஏழரை மணிகளை நேரங்களை ஒதுக்குகிறேன்



Saturday, 6 October 2012

புலம்பல் பிராணி அய்யப்ப மாதவனுக்கு...





// தீர்த்த முனி என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தமிழ் இலக்கியவாதிகளை கிண்டல் செய்யும் நாதாரியின் உண்மையான முகத்தை விரைவில் கிழித்தெறிவோம். உண்மையில் துணிபு இருந்தால் உண்மையான பெயரில் வந்து விமர்சனம் செய் பெட்டை பையலே... இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே... நேரே பார்த்தால் உன்னை எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்.//

- அய்யப்ப மாதவன்

அய்யா அய்யப்ப மாதவனாருக்கு. எல்லாவற்றையும் பப்பளக்கா என திறந்து போட்டு எந்நேரமும் உண்மைச் சொரூபத்தை முகநூல் வழியாக வாரி வழங்குபவரே. உங்களுக்கு என் வணக்கம். உங்களின் உண்மையான முகம் கிழிந்து தொங்கி நாற் நாறாகி காலம் பலவாயிற்று. உண்மையில் முகத்தைப் போட்டும் எந்த விமர்சனத்தையும் இதுவரை துணிவோடு எழுதாத நீர் எனக்கு யோசனை சொல்வது. ஏதோ கிடைத்து எதற்கோ குரைப்பதைப் போல் உள்ளது. உங்களுக்கு தெம்பு வந்து, உண்மையான முக லட்சணத்தோடு  இதுவரை நீங்கள் தமிழ் இலக்கியத்தில் கிழித்துக்கட்டிய தோரணங்களைக் காட்டுங்களேன்.

இது உங்களது அகந்தைக்கு…

பெட்டை,
மனைவியிடம் எளிதாக கிடைக்கும் சுகம்…

அய்யா பெட்டை என்றால் என்னவென்று தெரியுமா இதன் முலம்  திருநங்கைகளை நீங்கள் எவ்வளவு அறுவெறுப்போடு பார்க்கிறீர்கள் என உங்களின் அடிமன ஆழம் காட்டிக்கொடுத்துவிட்டது. நான் சொன்ன சொல்லில் மாறாமல் உங்களைப் போல் புழுக்கள்…இன்னும் கவிதையில் நான் மரத்தை நேசிப்பவன், மட்டை, குளம் குட்டைகளை நேசிப்பவன் ஆனால் சக மனிதனின் மண்டையைப் பொளப்பேன் என்பதுதானய்யா உங்களது இலக்கிய நாட்டம். கழிசடை வார்த்தைகளை உள்ளே எச்சீயூறி வைத்துக்கொண்டு, முகநூலில் உத்தம கோமணத்தை வரிந்து கட்டி. நான் உத்தமபுத்திரன் என உளறுவது நான் கண்டுவந்தது தானய்யா. உமது கேவலமான புத்தி உமது ஆத்திரத்தின் வழியாக அதன் சொரூபத்தைக் காட்டிவிட்டது. நான் செய்தது நாலு கவிதைகளை எடுத்து இயம்பியது. நீங்கள் செய்தது….கேவலமய்யா கேவலம்.

அய்யா திருநங்கைகளைக் கேலி செய்யும் உங்கள் பொது புத்தியை நான் புரிந்துகொள்கிறேன். இது உங்களைப் போல மூன்றாந்தர கவிஞர்களுக்கு வாய்க்கும் இயல்புதான்.

எந்நேரமும் கவிதை எழுதுகிறேன் கவிதை எழுதுகிறேன்…உப்பு புளி என விற்றுத் திரியும் நீங்களும் உங்களையொத்த நண்பர்களும்…ஆஹா அற்புதம்.

அய்யா தங்களது வரிகளில் நான் மிகவும் அறுவெறுப்பாக…ச்சீ…ஒரு கேவலமான ஒரு பிறவியா என்னைப் பேசுவது என நினைத்தது இந்த வார்த்தைகளில்தான்

// இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே...//


ஏனய்யா,…நீங்களெல்லாம் காதலையும் காமத்தையும் எழுதுவதைக் கண்டால் எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறதய்யா. அய்யா தாங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தங்களது இல்லக் கிழத்தி தூக்கிக்காட்டி காமத்தை எளிதாக தந்துவிடுகிறார்களா…அய்யா நாய்களைக் கவனித்திருப்பீர்கள்.கவிஞரல்லவா…! ஐந்தறிவு சீவன் அது. அதற்கும் போட்டிகள் பொறாமைகள். சண்டை போடுவது எல்லாம் உண்டு. ஆனால் போறபோக்கில் எளிதாக கிடைக்கும் சுகம் என்று எழுதியிருக்கிறீர்கள். அய்யா புலவரே…உங்களுக்கு வாய்த்த அந்த இல்லக்கிழத்தியை நினைத்து வருந்துகிறேன். என்றைக்காவது இல்லக்கிழத்தியின் நிர்வாணத்தை கண்ணெடுத்துப் பார்த்திருந்தால் இது போல் அசிங்கங்களை நீங்கள் முன் வைத்திருக்க மாட்டீர்கள், ஆனால் இரவில் விரலால் துளை தேடி கவிதை எழுதுபவர்தானே அய்யா நீங்கள்

வணக்கம் அய்யா.


அய்யா உங்களது முகப்புத்தகத்தை முழுதாக கீழே தள்ளிப் பார்த்தேன்…அதில் அனைத்திலும் கவிஞர்களை மதிக்காத சமூகம் உருப்படப்போவதில்லை, நாசமாகப் போகவேண்டும்…மண்ணோடு மண்ணாக வேண்டும் என புலம்பியிருந்தீர்கள், உங்களைப் போன்ற அறுவெறுப்புப் பிடித்தாட்டும் ஒரு பிராணியை கவிஞர் எனச் சொல்ல முடியுமா அய்யா…

அய்யா நீங்கள் கருவறையை விட்டு வெளியே வந்ததும், விரைகளை உள்ளுக்கிழுத்து எங்கே காகிதம், எங்கே எழுதுகோல் எனக் கர்ஜித்து…

அடிப் பிண்டமே..
எளிதாய் கிட்டிய சுகத்தில் என்னை
பெற்றுப்
பேண்டவளே…

என கவிதையெழுதி அன்னையிடம் நீட்டிய கவிசிம்மம் நீர்…
வாழ்க வளமுடன் அடியேனுக்கு அந்தக் கீர்த்தி கிடைக்கவில்லை. உங்களை உங்கள் கவிதைகளை, நான் புகழவும் இல்லை, இகழவும் இல்லை. ஆனால் இதற்கு நீங்கள் அனுப்பிய வார்த்தைகள் அபாரம். இகழ்ந்தால் இதற்கு மேலே வந்திருக்கும், புகழ்ந்தால் எனக்கு நல்லதொரு விளம்பரத்தை உங்களது பக்கத்தில் தேடிக்கொடுத்திருப்பீர்கள்.

ஆனால் அய்யா…பெட்டை, மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகம் என்றெழுதிய உங்களைப்போன்ற ஒரு மூன்றாந்தரத்தை பொருட்படுத்தி விமர்சிப்பது என்னால் ஆகாத காரியம்.

வணக்கம் அய்யா.

விமர்சனத்திற்கு ஆத்மார்த்திய அனுப்பிய வசுமித்ர கவிதை.






ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......

வசுமித்ர.


என்ன செய்யலாம் கவிஞனை
ஆற்றாமையை
ஒரு ஒப்பற்ற துரோகத்தை
துரோகத்தில் ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின் வாய்க்காலை
நஞ்சூறி விரியும் வெண்சிறகை
எடைகூடிய சொற்களைச் சுமக்கும்
கனத்த இதயத்தை

கண்ணீரின் வெதுவெதுப்பை
இயலாமையின் சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை

கவிஞன் வானமும்
வெளியும்
சூன்யமும் இல்லாத
அகதி
தலைச்சிறந்த அயோக்கியன்
அனாதை

வழியிழந்த
பேதமறியா விரல்களால்
நாளும் எழுதிச்செல்கிறான்
பறவைகளே நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை விதைக்கிறார்கள்

ஒரு பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது

புணர்ச்சியில் வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த வரியுதடுகளை
கனைக்கும் குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன் சொற்களாக்குகிறான்

ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்
வார்த்தைகளை இழந்த மௌனத்தை
உதட்டில் பீய்ச்சியடிப்பவனை
குருதியை யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை காய்ந்த உதடுகளால்
அரவணைத்து முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை

அவன் விரும்பாத நிதானத்தை
நிதானத்தின் பதட்டத்தை
என்ன செய்யலாம்
என்ன செய்யலாம்
ஒரு கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.


பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது...



அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள்
அமைதியாக
இருக்கும்போது
நாடு
தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான்
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.



அன்பு ஆத்மார்த்தி இவைகள் கவிதைகள்தான். அறிமுகத்திற்கு நன்றி.

அய்யா...இரு கவிதைகளையும் வாசித்தேன்.இவையிரண்டுமே காதலையும் அரசியலையும் அதனதன் போக்கில் வைத்து மத்தியஸ்தம் பண்ண ஒரு வாசகனை முன்வைத்து நகர்கிறதய்யா…

முதக் கவிதை காதல் கவிதை எழுதியவர்களை விட எழுதுபவர்களை காரணம் கேட்டு கவிதை தன் உடலிலிருந்து கேள்விகளை எழுப்புகிறது,  கவிதைக்குரிய பண்புகள் இதனுள் மொழியில் ஒற்றறியும் தன்மையைக் கொண்டு விரட்டியபடியே செல்கிறது,. கவிதைக்கான வரிகளை விதந்தோதுவதோடு அவற்றின் கைகட்டல்களைச் சுட்டிச் செல்லுகிறார்.

ஒரு
ஒரு கூர் நுனித் தனத்தை
முரசென அறிவிக்கும்
கவிஞனின் கரத்தை
எப்படித் துண்டிக்கலாம்

இவ்வரிகள் கவிஞரய்யாவின் காமத்தின் சித்திரங்களை வாசிக்குமாறு நவீன வாசகனின் முன் வீசிவிட்டுச் செல்கிறது. பெண்களை பொருட்களென பயன்படுத்தும் ஆண்களின் விரல்களை கத்தரித்துச் செல்கிறது,  அதேபோல,

கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை முடிக்கும் போது
பெய்யும் சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில் வரவழைக்கலாம்
கனங்கூடிய உப்பை.

என்ற வரிகள், கவிஞனின் உள்ளுணர்ச்சியை சல்லடையிட்டு அவனது தோல்விகளை அறிந்து எழுதிய வார்த்தைகள் அய்யா இவை.

இரண்டாவது கவிதையில் கவிஞரய்யா செயல்படுத்திய உத்தியாக   முதலில் தனக்கான கேள்விகளை கவிஞரய்யா தொகுத்துக்கொண்டு நான் முன்னமே கூறிய கவிதையின் கூறான ஒரு தொகுப்புத்தியை இதில் உருவாக்கியிருக்கிறார். சம்பந்தப்பட்ட கவிதையை அரசியலை, அரசியலமைப்பின் ஒரு தூணைத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எல்லா வார்த்தைகளிலும் ஒரு நவீனப் பார்வை நகர்ந்தபடியே உள்ளது. கவிதையின் தன்மைகள் இரண்டு தளங்களாக தன்னைப் பிரித்தபடியே செல்கிறது. 

ஒன்று கவிஞரய்யா  இரு கவிதைகளிலும் தனது பாணியாக கவிஞரய்யா  பேச்சுத்தொனியை மையமாக வைத்து பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் அவரது பாணியாக இரு கவிதையிலும் நீண்டு செல்கிறது. பத்திரிக்கையாளனை அவன் மொழியில் தாக்க கவிகளின்  வாக்கியங்களை அமைத்தததோடு இது வாசகனின் ஒரு சார்பை விளக்குகிறது.  இரண்டு கவிதைகளின்  எளிமை எவரையும் உள்ளே வரச்சொல்லக் கூடியது. உதாரணமாக

“பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை”

"நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்…"

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது
அரசு மௌனமாகிறது.


மற்றும்

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்

என்ற வார்த்தைகளின் பின்னால் தத்துவக்குறிப்புகள் சகல மையத்தினரையும் நிர்வாணத்தின் வெவ்வேறு திசை நோக்கி  வேறுபடுத்திக்காட்டுகிறது.மேலும் இரு கவிதைகளுமே சாபத்தின் தொனியை கொண்டிருக்கிறது. நிர்வாணத்தை சகலருக்கும் பொதுவாய் அதேசமயம் வெவ்வேறு உடல்களுக்கு விளக்கிக்காட்டுகிறார்.

நண்பர்களே பிரிவின் உப்பும்
தகிக்கும் காழ்ப்பும்
பிரிவின் எரிப்பும்
சொல்லின் முடிவும்
இறுகி
உடைக்க முடியா உன்மத்தமடைகிறது.

இவ்வரிகள் கவிதைக்கான மொழியை தன்வயப்படுத்திக் கட்டுக்குள் 
கொண்டிருக்கிறது. 

வணக்கம் அய்யா..