Friday 9 January 2015
Tuesday 6 January 2015
கண்டராதித்தன்
புகைப்படத்தில்
புறாவின் முட்டையைத் திருடுபவன்
ஒரு புறாவின் முட்டையை
நான்
திருடிக்கொண்டிருப்பது
போன்ற
புகைப்படம் இன்று
அஞ்சலில் வந்தது
பரிதாபமான எனது
கண்கள்
அப்போது முட்டையைப்
பார்த்துக்
கொண்டிருக்கவில்லை.
புறாவின் முட்டையை
வைத்து
ஆகவேண்டிய காரியம்
ஏதும்
எனக்கிருக்கவில்லை
முட்டையைத் திருடுவது
போல
நடித்துக்காட்டும்
புகைப்படமென்றும் கூட
யாரும் எடுத்துக்கொள்ளப்
போவதில்லை
கெட்ட எண்ணத்தோடு
அனுப்பப்பட்டிருக்கும்
இந்தப் புகைப்படத்தால்
புறாக்களையோ
என்னையோ விரும்பாத
ஒருவனை
யூகிக்கமுடிகிறது
எனக்கும் புறாவிற்கும்
யாதொரு தொடர்பும்
இல்லையென்பதை
விரும்பாத அந்த
ஒருவனை
இப்போது அலட்சியப்படுத்துகிறேன்
நிச்சயம் இது தெளிவாக்கப்பட
வேண்டிய விசயம்
எங்கும் அலைந்து
திரியும்
புறாவொன்றை நிறுத்தி
நிச்சயம் நான்
ஒரு புறாவின்
முட்டையைத் திருடுவது
போன்ற
இந்தப் புகைப்படத்தைக்
காட்டி
சொல்லத் தொடங்கினேன்
எந்த சூழ்நிலையிலும்
உங்களுக்கோ
உங்களின் முட்டைகளுக்கோ…
Subscribe to:
Posts (Atom)