Wednesday 31 October 2012

கண்ணீருடன் விடை பெறுகிறேன்.





வாசகக் கண்மணிகளுக்கும். என் உயிரினும் மேலான கவிச் செல்லங்களுக்கும்.

மொகநூல் வழியா உருண்டோடி நாளைய உலகை ஆளக் காத்திருக்கிற முகநூல் கவிஞருங்களுக்கு. நான் மறுபடியும் போறேன்.  உங்க கொடுமைய என்னால தாங்கமுடியலை.வாங்கன்னு கூப்பிடுறீங்க. வந்து பேசுங்க தீர்த்தமுனி கேட்கிறோம்னு சொல்லுறீக.வந்தா பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம். பேஸ்தடிச்சுப் போயி கிடக்கிறீக. நான் போறேன்னு சொன்னேன் போய்த்தொலையுறேன்னும் சொன்னேன். கேட்கலை.

உங்ககூடப் பேச அன்பா இருக்குது உங்க விமர்சனத்த பண்ணுங்க நான் என் காது கொடுத்துக் கேட்கிறேன் பேசுங்க முனி... பேசுங்க தீர்த்த முனின்னு சொன்ன அய்யா நேசமித்ரன் மித்ரா கிட்ட நீங்க கவிஞருங்களா அய்யான்னு கேட்டா,  என்னைக் கவிஞருன்னு அண்ணன் ராசு மற்றும் நண்பர் மாணிக்கம் அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா இன்னும் உற்றார் உறவினர் மற்றவர்களும் சொல்லுறாங்கன்னு சொன்னாரு. என்னைக் கவிஞருன்னு  என் ஒண்ணுவிட்டச் சித்தப்பா சொன்னாருங்கிறாருங்க. இந்தக்கொடுமைக்கு நான் மருந்தக் குடிச்சுத்தான் சாகணும்.

சரி இருக்கட்டும் வெமர்சனமும் அதுவும் ஒண்ணுதான். இதுமட்டுமா சொன்னாரு அதுக்கும் ஒரு படி மேல போயி அய்யா மித்ரனார் நான் தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன்ன்னு எடுத்துத்தொடுத்து, நீங்க வாங்க நாம கவிதையப் பேசலாம் வெமர்சனம் பேசலாம்னு சொன்னாரு.சொன்னவரு சொன்னவருதான். அய்யாவ ஆளையே காங்கலை. எங்க போனாரோ.அவரு பக்கத்துல போயிப் பார்த்தா தஸ்யூஸ்ங்கிறாரு.கிஸ்மிஸ்ங்கிறாரு.நான் கேட்ட கேள்விக்கு பதிலக் காணோம். ஆனா காமெடியா இருக்கு. இடையில அமானுஷ்யம் நீ செய்யுறத உருப்படியான வெமர்சனம் இல்லேம்பாரு ஆனா அவரப் பண்ணு வெமர்சனம் ஏய் இவரப்பண்ணு வெமர்சனம். அய்யாஆஆஆஅ.....

போதும் சாமி நீங்க உங்களுக்குள்ளேயே பொலம்பிட்டுக் கிடங்க.நான் போறேன். இனி எந்த வாசகக் கண்மணியோ இல்லை கவிச் செல்லங்களோ கூப்பிட்டா நான் வரமாட்டேன்,. போறேன். போறேன்னு சொல்லாதீங்க போயிட்டு வாரேன்னு சொல்லுங்கன்னு நீங்க சொல்லுறது என் காதுல ஏறுது. சரி இப்பப் போறேன்.

ஆனா போறதுக்குக் காரணம் சொல்லணும்ல சொல்லாட்டத்தான் பயமான்னு கேட்டுப்போடுறாக.ஆனா நான் கேள்வி கேட்டு பதில் வராம அவங்க இருக்கிறதுக்கு பேரு அஞ்சா நெஞ்சுரம். கவுத வரிச்சரம். இதுவரைக்கும் உரைக்கிற மாதிரி ஒரு ஆளும் பதில் சொல்லலை. அதனால போறேன். போறதுக்கு காரணம் இதுதான் மொகநூலார்களே.மொகநூல் கவிஞருங்களே.

உங்களுக்குன்னு என் சொந்தச் செலவுல பதிமூணு நாளுல கவுத எழுதுவது எப்பிடின்னு ஒரு பொத்தகத்த எழுதப் போறேன்.அதுக்கு நீங்க விடைகொடுக்கணும்.வெமர்சன வடை இப்போதைக்கு இருக்காது.நான் கிளம்புறேன் கிளம்புறேன். உங்க ஆஷை முகத்தையெல்லாம் மொகநூல்ல கண்டு ருசிச்சுச் சாப்பிட்டேன். அந்த ஆஷை வதன முக அழகையெல்லாம் பொத்தகத் திருவிழாவுல உத்து உத்துப் பார்ப்பேன்னு நினைக்கிறேன்.நீங்கதான் ஆளுக்கொரு அழகு சிந்துறமாதிரி,பேனாப் புடிச்சு விட்டத்தப்பார்த்தமாதிரி, நெட்டுக்கப் படுத்து, கொட்டத்தப் பார்த்தமாதிரி,மரக்கட்டைல தோதா உடம்பவளைச்சு உத்துப்பார்க்கிற மாதிரி டிசைன் டிசைன்னா உங்க  கொழுத்த வதனங்களைப் பதிச்சிருக்கீகளே. மறக்கமுடியுமா.

மறக்காம பொத்தகத் திருவெழாவுக்கு வந்திருங்க.இவகதான் அவக அவகதான் இவகன்னு எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டச் சொல்லி உங்ககிட்ட கைச் சாத்து வாங்கணும். பல்லத்தனையும் தெரியுற மாதிரி ஹி ஹின்னு கைச்சாத்தப் போடுங்க. கைவலிக்கும்னு நினைக்கிறவக ரப்பர் ஸ்டாம்பு கொண்டுவாங்க.ஆனா மொகநூல் கவிஞருங்களே அய்யா நீங்க கவிஞருங்களா அய்யா ன்னு யாராவது கேட்டா மட்டும் தலைதெறிக்க ஓடிப்புடாதீக.எனக்கு பெரிய சங்கடமாப் போயிரும் ஆமா, பார்த்திக்கிடுங்க..

தீர்த்தமுனியின் வெமர்சனக்கடை பட்டப்பகல் பதினாலு மணிக்கு சாத்தப்படும்.வேகமா ஓடிவந்து நான் எழுதுனது கவுத.நான் கவிஞருன்னு சொல்லுறவக லிஸ்டப் போட்டுச் சொல்லுங்க. மைண்ட்ல வச்சிக்கிறேன்.

கடைய மூடிட்டா இனி தொறக்க மாட்டேன். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி  மூணு மாசம் கழிச்சுதான்  வருவேன் பிப்ரவரி 2013 ல. சரிங்களா மொகநூல் கவிஞருங்களே.
மூட்டையக்கட்டுறேன்.


ஜிஜ்ஜினக்கா சின்னக் கிளி
சிரிக்கும் பேஸ்புக் கிளி
மேடையிலே ஓடி வந்தார் கவுத பாட
கவுத பாடும் வேலையிலே கம்பெடுத்து
தீர்த்தமுனி விட்டுப்போட்டு ஓடிப்போனார் கூட்டத்தோட

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல
நான் எழுதுறேன் எழுதுறேன் கவுத வல்ல

……..ஙே… அஹ் அஹ் அஹ்
……..ஙே…. இஹிக் இஹிக் இஹிக்…

வணக்கம் வந்தனம் நமஸ்காரம் ஸ்வாகதம் கும்புடுறேன் சாமி.

அய்யா திருமிகு நேசமித்ரன் மித்ரா அவர்களுக்கு





அய்யா எனது வரவில்லாமல் போனதால் தாங்கள் வருத்தமடைந்து எழுதிய பதிலைக் கண்டேன் அய்யா. உங்களுக்காகவாவது சில விமர்சனங்களைச் செய்ய கடமைப்பட்டவன் ஆகியிருக்கிறேன் அய்யா.


இப்படித்தானய்யா ஒரு ஆரம்பகட்ட விமர்சகனை வாழ்த்தி வரவேற்று பரவசமளித்து உற்சாகப்படுத்தவேண்டும். உங்களது அன்புக்கு எனது விறைப்பெடுத்த சல்யூட் ஒன்றை வைக்கிறேன். அய்யா எனது விமர்சனங்களில் அடிக்கடி அய்யப்ப மாதவர் புலம்புவதும், நீங்கள் இப்போது சொல்லுவதும், இன்னும் எண்ணற்ற முகநூல் கவிஞர்கள் அய்யோ, அம்மா கொல்லுறான்…கொல்லுறான் என அலறுவது ஒன்றே ஒன்றுதானய்யா, நான் தனிமனித தாக்குதல் செய்திருக்கிறேன். இதைத்தானய்யா உளறி வருகிறார்கள். அய்யா நீங்களாவது அன்பு கூர்ந்து எனது விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் இருந்தால் ஒரு வார்த்தையைச் சுட்டுங்கள் அய்யா…தாழ்பணிந்த மன்னிப்பை மனமுவந்து கேட்பேன் அய்யா. அய்யா பெட்டைப் பயலுக்கு லைக் இட்ட நீங்கள் பின் அதை நீக்கியது உங்களது மாண்பைக் காட்டுகிறது அய்யா. இதற்கு அய்யப்ப மாதவர் குமுறிக் கொந்தளித்து காத்துவிடுவதும் செவிகளுக்கு விருந்தாகிறது அய்யா.

அய்யா நீங்கள் சொல்லியபடி தமிழில் கவிதை விமர்சகர்கள் தம் மேலான நேரத்தையும் உழைப்பையும் ஈந்து தொண்டாற்றுவது வரவேற்கத்தக்கது . ஒரு கவிதையை கவிதை அல்ல என்று சொல்ல ஒரு வாசகனுக்கு முழு உரிமையும் உண்டு . தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன். இந்த நம்பிக்கையை ஆளுக்கொரு வாய் ஊட்டிவிடுங்கள் அய்யா.

//மேற்குறிப்பிட்டபடி தனிமனித அவதூறுகள் ,தாக்குதல்களை வெறுக்கிறவனாகவே துவக்கம் முதல் உள்ளேன்//

அய்யா, இதைத் தாங்கள் அடிக்கடி கண்ணியமான குரலில் ஒரு நல்ல நுவலென சொல்லி வருகிறீர்கள். ஆனால் அந்த ரியாஸ் குரியான இருக்கிறதே அது லூசா என்று கேட்டதும் உங்களின் மிருக குணம் சட்டென முட்டைக் கண்ணை விழித்துப்பார்த்து அது சொன்ன தனிமனித அவதூறானா லூசா அய்யா என்பதற்கு லைக்கைப் போட்டு விடுகிறதய்யா…

அய்யா உள்ளே மிருகம் இருக்கிறது, சற்று அதட்டி வையுங்கள் அய்யா. நினைவில் மிருகமே உள்ள மனது, கடித்து வைப்பதோடு, குதறி வைக்கும் அபாயமும், ஆபத்தும் ஒருங்கே இருக்கிறதய்யா, உடனே நீக்கிவிடுங்கள். இதை உங்களுக்கு மட்டுமல்லாது உடன்பாடோடு லைக் இட்ட தனிமனித அவதூறை பழுது நீக்கி வெறுப்பவர்களான அய்யாக்களும், இது சின்னப்பய விசயமப்பா என பதில் ஏதும் சொல்லாத அண்ணன் ராசு மற்றும் நண்பர் செல்வம் இன்னும் தூரத்து உறவு வாசு தேவன் அய்யாக்களுக்கும் அறிவிக்கிறேன் அய்யா.

அய்யா இந்த ரியாஸ் குரியான இருக்கிறதே ரியாஸ் குரியானா..அது பொதுச் சுவற்றில் கழியும். பின் தனியே பெட்டிச் செய்தியில் வந்து மன்னிப்பு என்கும். கோபித்து விசர் பிடித்து என்னைத் தடை செய்யும். பின் கொஞ்சிக்கொண்டு காலைக் கட்டும். அது ஒரு காமெடி பீஸ் அய்யா.

அய்யா இதுகளை விடுங்கள். தனிமனித தாக்குதலை செய்யமாட்டேன் நான் உத்தமர் என்று உரைத்த நீங்களே அது லூஸா என்றால் அதற்கு லைக் இடுகிறீர்கள். அதிலும் பாருங்கள் அது ஒரு பிரதிக்கவிஞர் என தனக்குத்தானே தனது வாயில் புலம்பிக் கொண்டிருக்கிறது. அய்யா அது சொல்வதைக் கவனியுங்களேன். அய்யா சற்று நின்று பொறுமையோடு கவனியுங்கள். அந்த முற்றும் தெளிந்த தெளிவு உரைப்பதைப் பாருங்கள்.

அது சொல்கிறது...

// நேசமித்திரனின் கேள்வி முக்கியத்துவம் மிக்கதாகத் தோன்றவில்லை.அதற்கு உங்களின் பதில் பொறுப்பற்றது.//

என்னய்யா இது கொடுமை. முக்கியத்துவம் இல்லாத கேள்வியாம், ஆனால் நான் பொருப்போடு வந்து பருப்பெடுக்க வேண்டுமாம். எனது கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் முக்காடு போட்டு என்னை தடை செய்த அது, இப்பொழுது முக்காட்டை நீக்கி திருட்டு முழி முழிப்பது ஏனோ அய்யா. முக்கியமில்லாத கேள்விக்கு பொறுப்பான பதிலைக் கூறு எனச் சொன்ன அது லூசு எனப் பேசுவது எந்தப் பொறுப்போடு அய்யா.


அதோடு மித்ரனய்யா தாங்கள் எனக்கு அன்பு கூர்ந்து நல்ல விமர்சனம் இது கெட்டவிமர்சனம் இது நடுநிலைமை ஓர நிலைமைகளை எல்லாம் நான் பொருப்படுத்தியே பதில் சொல்கிறேன் அய்யா எனது கவிதை குறித்த விமர்சனங்கள் எனது வலைத் தளத்தில் உள்ளதய்யா


கவிதை பற்றி நான் உரையாடிய சான்றுகள்;

1 நவீன கவிதையிலிருந்து தப்பிக்க… அய்யாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பாலற்ற மாந்தர்களுக்கும்…..

2 கவிதையில் கனவு என்பது நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையுமல்ல உணர்ச்சியுமல்ல.ஆனால் அது கனவு சாராத தடையற்ற தொடர்புகள் ஆகும். கனவில் உள்ள …

3 சலனங்களின் வரைபடமாக இக்கவிதையைச் சுட்டுகிறேன்.

4 வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....

5 கவிஞர்- ஆத்மார்த்தியின் வருடும் சலங்கை - யை விமர்சித்து

அய்யா இது சாம்பிள்களய்யா இன்னும் இது போன்ற பல தலைப்புகளில் எழுதியிருக்கிறேன். நான் கவிதைகளாக் கருதுபவையென அகநாழிகை வாசுதேவன் தொடங்கி பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதியென சில கவிதைகளையும் இட்டுள்ளேன் அதிலும் உங்களுக்கு விமர்சிக்க ஏதேனும் இருக்கலாமய்யா. தாங்கள் சற்று சிரமம் பாரது வருகை தந்து எனது விமர்சனங்களில் ஒளிந்துள்ள தனிமனித அவதூறுகள், இன்னும் காய்தல் உவத்தல் நடுநிலைமைகள் இவைகளைச் சுட்டினால் ஒரு ஆரம்ப கட்ட விமர்சகனான எனக்கு அது உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அய்யா.
அய்யா நான் நீங்கள் கவிஞராய்யா எனக் கேட்டதற்கு நண்பரும் அண்ணனும் என்னைக் கவிஞர் என்று சொல்லுகிறார்கள் என பதில் நுவல்ந்திருக்கிறீர்கள் அய்யா…நண்பர் அண்ணன் பெரியப்பா சித்தப்பா அவர்களது உடன்பிறந்தவர்களிடம் நான் கேள்வி கேட்கமுடியுமாய்யா. நான் கேள்வி கேட்டது உங்களிடம் அய்யா. இப்பொழுதாவது சொல்லுங்களய்யா நீங்கள் கவிஞரா அய்யா.

பொறுப்போடு பதில் சொல்லுவதோடு, அடிக்கடி எனக்கு விமர்சகப் புத்தி இப்படி இருக்க வேண்டும் என உரைத்ததைப் போல நானும் விமர்சகனாய் கவிதை எப்படி என எனது வலைப்பக்கத்தில் உரைத்திருக்கிறேனய்யா. பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் சொன்ன காய்தல் உவத்தல் இன்னும் பழுத்தல் இருந்தாலும் வாங்கிக்கொள்கிறேன் அய்யா லூசா என்பவருக்கு லைக் இடும் உங்களது உள்ளம் மிக டைட்டாக இருக்கலாம். மனதைச் சற்றுத் தளர்த்தி நீங்கள் கவிஞரா அய்யா என்ற கேள்விக்குப் பதில் சொன்னால் மிக பதமாக அன்பாக எனது விமர்சனங்களைச் சுட்டுவேன் அய்யா.
நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு எனது மாமா பதில் சொல்லிவிட்டார் என்றால் உங்களுக்கு வருத்தம் வருமா வராதா அய்யா...

அய்யா உங்களது வலைப்பக்கத்தின் தலைப்பு நேசமித்ரன் கவிதைகள் என உள்ளது அய்யா… நீங்கள் கவிஞரா அய்யா என்பதை ஒரு சிறு வேண்டுகோளாகக் கொள்க, அய்யா இக்கேள்விக்கு அண்ணன் ராசு, மற்றும் அருமை பெரியப்பா, சிறுமை சித்தப்பா, பக்கத்துவீட்டு நண்பர் இவர்களைக் கூப்பிடாமல் நீங்களே உங்கள் அன்புவாய் திறந்து அருள் பாலியுங்கள் அய்யா. நல்ல நுவல்தல்களை நானுரைப்பேன் சத்தியத்தோடு. ஏனென்றால் அய்யா நீங்கள் இரு கேள்வி கேட்டு பதில் அளித்தவன் நான் என் ஒரு கேள்விக்காவது பதில் சொல்லும் கடமைப்பட்டவர் நீங்கள்.( அய்யா, நான் தானய்யா தங்களிடம் முதல் கேள்வி கேட்டேன் இன்னும் பதில் தகையவில்லை. இதற்கிடையில் நீங்கள் இரு கேள்விகளை வைத்தீர்கள் நான் பதில் சொல்லியிருக்கிறேன்.)

அய்யா முகநூல் கவிஞர் என்றதும் அதை அசிங்கமாக நினைத்துப் பதறி இன்னும் உள்ளுக்குள் புழுங்கி அசிங்கத்தை உளறிய அய்யப்பமாதவர் எனக்கு இன்னும் நாலு வரி பதில் எழுதாமல் காக்கா தவளை எனப் பேசுவதோடு

பார்க்கும் இடமெல்லாம் தீர்த்தமுனி
உன் பேரைக் கண்டால் பதறுதடா தீர்த்தமுனி
உள்ளம் பதறுதடா…
கவிதை கசக்குதடா
முனி காலி செய்தாயடா

எனப்பதறி இன்னும் தனது பக்கத்தில் பெட்டைப்பயல் என அந்த ஆம்பளைப் பயல் சொல்லி வருகிறது. அதற்கும் நீங்கள் அன்பாய் பேசுவது எப்படிக் கனிவாய் பேசுவது எப்படி என ஒரு பாடம் நடத்துங்கள் அய்யா. அதை நான் எதிலோ மிதித்துவிட்டது போல் குரைத்துத் திரிகிறது. அப்புறம் அய்யா உங்களது கவிதைய ஏற்றுக்கொண்ட ராசு அண்ணன் மற்றும் நண்பர் இன்னும் செல்வன் மற்றும் ஏனையோருக்கு உங்களது கவிதைகளை எப்படி கவிதைகள் எனச் சொன்னார்கள் என்பதை தீர்த்தமுனியின் வானொலியிலிருந்து விமர்சனச் சேவை செய்ய அமைதியோடு காத்திருக்கிறேனய்யா. அவர்களும் கவிதைதான் அது என விளக்க வேண்டும்.

அய்யா அண்ணன் ராசுக்கு.
நீங்கள் இடையில் ரெண்டு வரியை பிராய்ஞ்சு போட்டு இது கவித கவித என்றால் நானும் இன்னும் பல வரிகளை பிராய்ஞ்சு கவிதையே இல்லை எனப் பேசி நிரூபித்து, கட்டிய மனக் கோட்டையை உடைக்க முடியும் அய்யா. பேசலாமா அய்யா…

அய்யா செல்வம் மாணிக்கமய்யா
காசு வாங்கிட்டு கவிஞ கவிஞ.. கவுத கவுதன்னு கூவுறது மாதிரியேக் கீதே…ஆவ்வ்வ்வ்வ்.ஜிவ்…பவ்..மண் கவ்...

ரியாஸ் குரியானா…தெளிவாக்கீதா..

மாட்டுத்தலை அமானுஷ்யருக்கு…ச்சீ…போ


அய்யா மித்ரனய்யா நீங்கள் விமர்சகர்கள் குறித்து சொன்ன பல வாக்கியங்கள் எனக்கு உங்களுடன் உரையாடும் தகுதியை நான் இழந்து விட்டதை தெரிவிக்கிறது என்று நான் கூறமாட்டேன். எனக்குப் பேசுவதற்கு நிறையப் பிடிக்கும். பேசுவோம் அய்யா

திருமிகு நேசமித்ரன் மித்ரா அய்யா…எனது கேள்வி ஒன்றுதானய்யா. நீங்கள் கவிஞராய்யா?பதில் சொன்னால் உங்கள் வருத்தங்களை போக்கி நான் பேச மகிழ்ச்சியான அன்போடு வருவேன் அய்யா….
அய்யா உரையாடலாம் அய்யா...

Tuesday 30 October 2012

அய்யா அமானுஷ்யபுத்திரருக்கு





போய்யா போ

நான் ஒரு கெட்டவன்
நான் பீடி பிடிப்பவன்
            நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டுப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் பிடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலை பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேண்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்‌ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரச மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை பிளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
……………………………

யார் கெட்டவன்
யார் நல்லவன்

அவ்வளவுதானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.


அய்யா அமானுஷ்ய மாட்டுத்தலையரே மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இப்பொழுது நித்தமும் சுற்றிச் சுழல்வது ஆத்மநாம் கவியுலகின் அடிப்பரப்பிலய்யா. ஒரு கள்ளப் பூனையை நான் சுற்றி விளக்க  வேலை செய்ய வேண்டுமாவென யோசித்தேன்.

இந்தச் செறுப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறீர்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு

இது முதல் தொடங்கி அவர் பின்பற்றி அடியொற்றி வந்த அவர் அது குறித்து எங்காவது சொல்லியிருக்கிறாரா அமானுஷ்ய புத்திரரே.சொல்லுங்கள். நீங்கள் அவரது வெறிகொண்ட ரசிக ஆத்மா என நினைக்கிறேன்… இப்படியே நிறைய அள்ள அள்ளக் குறையாத செல்வமாய் அவரின் கவிதைகளை பொங்கி வரும் காவேரியாய் கொத்திக் குதறிக்கொண்டு போன உங்கள் ம.புவின் கவிதைத் தொனித் திருட்டைச் சொல்லிக்கொண்டு போகலாம் அய்யா.


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதிலே ஒரு நிம்மதி

என்ற வார்த்தைகளின் பின்னால் உயிர்ப்புற்று விளங்கும் கவிதையின் ஆழ்மனதைத்தான் இப்பொழுது கள்ளச் சந்தியில் வரிகளாகவும் தொனிகளாகவும் பிய்த்து பிய்த்து விற்று வருகிறார். இன்னும் சொல்லலாம் அமானுஷ்ய புத்திரரே..

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                        ஒரு கட்டிட வரைபடத்தையும்
ஒரு சாலை விவரக் குறிப்பையும்
ஒரு பெண்ணுக்கு காதல் கடிதத்தையும்
ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை

………………….
…………………

அய்யா அமானுஷ்யம்…நீங்கள் பதில் சொல்லுங்கள் அய்யா. கொந்தளித்து குமுறிய உங்களது கவிஞர் ம.பு.பதில் சொல்லுவாரோ…

எங்கோ பார்த்த முகம்
எங்கோ பார்த்த கண்கள்
எங்கோ கேட்ட ஒலி
எல்லாம் எங்கோ
எங்கெங்கோ


அய்யா அமானுஷ்யம்…புரிகிறதா அவர் என்ன மாதிரியான வரிகளையும் தொனிகளையும் கவிதையின் சரக்கையும் கைமாற்றுகிறார் என்று. அய்யா இபொழுது ஆத்மநாமை எடுத்து வாய் விட்டுப் படியுங்கள். அவரது சொற்கள் சப்தங்களாய் உங்கள் காதில் விழும்போது நீங்கள் அடையும் அனுபவத்தை சொல்லில் விளைந்த அந்த சொர்க்க அற்புதத்தை பதிலாய்ச் சொல்லுங்கள். அப்படியே ம.பு வின் செயற்கையான சத்தத்தையும் நீங்கள் காதுகளை மூடிய அனுபவத்தையும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்….

அய்யா அமானுஷ்யம் சிந்திப்பீர்!!! செயல் புரிவீர்.!!! நிந்தை மறந்து, சிந்தை மறக்காது  நித்தமும் வாசியுங்கள். புத்தம் புது பூக்கள் மலரட்டும் நித்தம் நூறு புன்னகை மலரட்டும்.

அன்புகனிந்த
தீர்த்த முனி.

Saturday 27 October 2012

முகநூல் கவிஞருகளுக்கு.







நான் கவிதை குறித்துப் பேசிய வரையில் முகநூல் கவிஞர்களின் ஓலம் பெருகிவிட்டது.  நீங்கள்கவிஞரா அய்யா  என்ற கேள்வியைக் கேட்டாலே கண்ணீரோடு பதட்டமும், நீங்கள் எழுதியது கவிதையா அய்யா என்று கேட்டால் உளறிக்குழறிப் பம்மும் நிலைக்கும் அது சென்றுவிட்டது. இவர்களிடம் பேசவே எனக்கு பரிதாபமாக இருக்கிறது.எனது விமர்சனச் சுட்டலை  கொஞ்ச நாளைக்கு ஒத்திப் போடுகிறேன். வணக்கொம்...கவிஞக் கண்மணிகளே....வணக்கொம்...எப்படியும் திரும்பி வர  மூணுமாசம் ஆகும்னு நினைக்கிறேன்..பொத்தகத் திருவிழாவுல கவிஞருங்க முகத்தையெல்லாம் முகநூல்ல போட்டிருக்கிற போட்டோ மாதிரி பேனா நோட்டோட இருக்குதான்னு பார்க்க ஆவலா காத்திருக்கேன்…

அய்யா வந்தனமாம் வந்தனம்
வந்த கவியெல்லாம் குந்தனும்
நான் வரும்போது வாங்கியாந்தேன்
நல்ல நல்ல விமர்சனம்
அய்யா கவிகளே
வந்தனமய்யா வந்தனம்.

வணக்கம் நமஸ்காரம்,ஸ்வாகதம்
கும்புடுறேன் சாமி.
போய்த்தொலைகிறேன்.


அன்பு கனிந்த
- தீர்த்தமுனி

Thursday 25 October 2012

ஆம்பளைப் பயல் அய்யப்ப மாதவனுக்கு.





தீர்த்த முனி என்கிற கோழையை எத்தனைபேர் உங்கள் நட்பு உறவில் முறித்திருக்கிறீர்கள். வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் போலியான பெயர்களைக்கொண்டு வளர்ச்சிக்குத் தடைபோட முயல்கின்றனர். யாவரும்.காமின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தீர்த்தமுனியென்பவன் விரைவில் பிடிபடுவான். அவன் முகத்திரை கிழியும் காலம் நெருங்கிவிட்டது.


- அய்யப்ப மாதவன்


அய்யா அய்யப்பமாதவரே.
ஒருவரும் நீக்கவில்லை என்றதும் ஏனய்யா இப்படிப் புலம்பித் தள்ளுகிறீர்கள். எனக்கு வாய்த்த நண்பர்கள், நல்வரவுகள் அப்படி. உங்களைப் போல ஒரு மூன்றாந்தரத்திலும் கேடுகெடுட்ட நான்காம்தரமாய் இருப்பதை விட கோழையாய் இருப்பது மாபெரும் வரமய்யா.. உங்கள் பிரச்சினை புரிகிறது மாதவரய்யா. உங்கள் கவிதையை நான் பொருட்படுத்தவில்லை என்பதுதானே.


காக்கா, தவளை
நான் அமைதியாய் இருக்கிறேன்
பொழுது விடிந்துவிட்டது.

நான் கத்திக்கொண்டிருக்கிறேன்
காக்காய் அமைதியாகி விட்டது

டக்கால்டி
டிக்கால்டி...

இதே பாணியில் தினமும் உளறி..ச்ச்ச்ச்ச் பாவமய்யா நீங்கள் பரிதாபமாக இருக்கிறது. அந்தோ பரிதாபம்.என் வாழ்வில் காணா பரிதாபம்.

நீங்கள் கவிஞர் என நம்பி காரியம் ஆற்ற நினைப்பது எதனால்.

அய்யா ஆம்பளைப் பயலாரே.. பெண்களிடம் எளிதாக சுகம் கிடைபவன், பெட்டைப் பயல் என்று நீங்கள் சொன்னதிலிருந்து உங்களது முகமூடியல்ல முகமே கிழிந்து பல நாட்களாயிற்று. நீங்கள் பெண்களையும், கட்டிய மனைவியையும் எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள், திருநங்கைகளை எவ்வளவு கேவலமாக எண்ணுகிறீர்கள் என்பது புலப்பட்டு விட்டது.இவ்வாறு இழித்துப் பேசி தராதரம் இன்றி நடந்த உங்களை தடை செய்யாமல் நண்பர்கள் இருக்கும் காரணம் நீங்கள் கவிஞர் என்பதால் இல்லை. உங்கள் மேல் அவர்கள் பரிதாபப்படுவதுதான். அது உங்களுக்குப் புரியவில்லையா அய்யா.அவர்களிடமே கேளுங்கள் அய்யா.


தவளை போல் தாவமட்டும் அல்ல...தவளை போல் கூச்சலும் இடுவது எதற்கய்யா...இப்பொழுது கேட்கிறேன்...உமது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனைவியிடம் எளிதாக சுகம் கிடைப்பவர்களா...அப்படிக் கிடைத்ததனால்தான் உம்மை கவிஞர் எனக் கூறுகிறார்களா..அப்படிக் கூறினால் அந்த ஆம்பளைச் சிங்கங்கள் பெயர்கள் எல்லாம் வாழ்கவய்யா...நான் பெட்டைப்பயலாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு மகிழ்ச்சிதான் அய்யா.

அய்யா யாவரும் காம் என்றால் என்ன.  யாவரும் ஆம்பளைப் பயல்கள், மனைவியிடம் எளிதாக சுகம் கிடைத்தவர்களா அய்யா.


அய்யா வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறீர்களே அய்யா...உங்களுக்கு எதய்யா வளர்ந்திருக்கிறது.மோசமய்யா மோசம்.வேஷமய்யா வேஷம்

ஏதாவது ஒரு வேஷத்தைப் போடுங்கள் மிஸ்டர். பல வேஷம்.

அய்யா எனது நட்புப் பட்டியலிலிருந்து விலகியவர்கள் சுதீர் செந்தீல் என்பவர். அவரும் என்னை தடை செய்யவில்லை. பட்டியலில்தான் இருக்கிறார். பிறகு மனோமோகன் என்பவரைக் காணவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் யம்மாடி ஆத்தாடி என மூச்சிரைக்க ஓடிய ஓட்டத்தை தொடங்கி வைத்தது அய்யப்ப மாதவன். இரண்டாவது ஆத்தா மார்த்தி. உங்களை நான் பொருட்படுத்தவேயில்லை. யார் சொன்னார்களோ உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பெட்டைப்பயல் என்றீர்கள், அதற்கு பதில் கொடுத்து விட்டேன். அடுத்து ஆத்தா மார்த்தி. பாவம். ப்ச்....

அய்யா நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நாம் கவிதை குறித்து விவாதிப்போம். நான் தயாராக இருக்கிறேன். சும்மா ஒளிந்துகொண்டு.மொள்ளமாறி, பெட்டைப்பயல் என உளறி வைக்காதீர்கள். உங்களுக்கு கவிதை மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாம் விவாதிக்கலாம். தயாராகத்தான் இருக்கிறேன். இல்லை இதுவரை நான் செய்த விமர்சங்களில் பிழை இருக்கிறது, அது சரியில்லை இது தவறு  எனச் சுட்டிக்காட்டுங்கள். அதையும் பேசலாம், பிளாக் செய்துவிட்டு மறைந்து இருந்து உளறுவது. மிக மோசமய்யா.


ஆத்தா மார்த்தி சொல்லி, நீங்கள் ஹேக் செய்யுங்கள் எனக் கெஞ்சி நண்பர்களிடம் காரியம் சாதிக்க நினைப்பது வருத்தமய்யா.அவர் என்னை பிளாக் செய்ய அவரது நண்பர்களை மிரட்டிப் பார்த்தார்.ம்ஹீம்.எதுவும் நடக்கவில்லை.இப்பொழுது நீங்கள் கேக் செய்யுங்கள், வடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் என்கிறீர்கள்.என்னை தடை செய்யும் அளவுக்கு நான் செய்த மாபாதகம் எதுவெனச் சொன்னால் நான் புரிந்துகொள்வேன் அய்யா.

உண்மையிலேயே நீங்கள் கவிஞர்களை மதிப்பவராக இருந்தால், நாம் கவிதை குறித்துப் பேசலாம். ஆனால்  நீங்கள் உளறுபவராக இருந்தால். அய்யா நீங்கள் விமர்சித்த கவிதைகளில் ஒன்றை எடுத்துப் போடுங்கள். அய்யா ஆம்பளைச் சிங்கமாய் நீங்கள் இருப்பது எதில் அய்யா.திட்டுவதில் மட்டுமா.


அன்பர்
அடியேன் 

- தீர்த்தமுனி

Tuesday 23 October 2012

மாலதி மைத்ரி




குறுக்குவெட்டுக் காட்சிகள்

நம் உரையாடலின் இடையே
வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்கின்றன
மரங்கள் வேரோடு சாய்கின்றன
கொலைகள் அரங்கேறுகின்றன
பறவைகள் இறகுகளை உதிர்க்கின்றன
நதிகள் வறண்டுவிடுகின்றன
தற்கொலைகள் நிகழ்கின்றன
கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன
பேய் மழை சடைக்கிறது
தொடர் வெடியோசை நீளுகிறது
வனம் தீப்பற்றி எரிகிறது
நாம் மௌனமாகும் போது
ஒரு புல் முளைக்கிறது.



சவப்பேழையின் அரசன்

கவிஞனின் மனைவி
தன் சவப்பெட்டியை
தினமும் அறைக்குள்
திறந்து மூடுபவளாக  இருக்கிறாள்
அவளின் சீதனமாக வந்திருக்கலாம்
அல்லது
அவள் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கலாம்

காலையில் வீட்டைப் பூட்டிக்கொண்டு
சுதந்திரத்தைச் சுவாசிக்க
கிளம்பும் கவிஞன்
தன் விடுதலையைப் புகழும்
கவிதைகளுக்கு முன்
மது தீர்ந்த புட்டிகளை
உடைத்துக் கொண்டாடுகிறான்
கூலிக்குப் புணர அழைத்தவளை
பணம் கொடுக்காமல் ஏமாற்றியோ
அந்நியப் பெண்களின் அறைக்குள்
அத்துமீறி நுழைந்த சாகசத்துடனோ
அன்றைய கலக நாளை
தன் வீர காவியத்தின் பக்கத்திற்குள்
தைத்து வைக்கிறான்

பின் சாமத்தில்
தன் ராஜ்ஜியத்தின்
கோட்டைக்குள் நுழைபவன்
பேழையைத் திறந்து மனைவியிடம்
தனது சாம்ராஜ்யத்தின்
வாரிசை உருவாக்கும்படி கட்டளை இடுகிறான்

அவளும் அவனுடைய
சவத்துக்குக் கொள்ளி வைக்கும்
புத்திரர்களை
ஈனத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்


Monday 22 October 2012

யவனிகா ஸ்ரீராம்.





வீட்டு விலங்கு

பிறந்த குழந்தைகளை
உயிருடனோ பிணமாகவோ
குப்பைத் தொட்டியில் போட்டு விடுபவர்கள்தான்
நாய்களுக்கு  நல்லவகையான
புரதச்சத்துக் கிடைக்க உதவி செய்கிறார்கள்
நாக்கைத் தொங்கவிட்டவாறே
தலைகுனிந்தபடி நெடுஞ்சாலையில்
ஓடிக்கொண்டிருக்கும் நாய்
நகரமயமாகும் சூழலில்
அந்நியமாதலைக் குறிக்கிறது எனலாம்
நாய் வளப்பவர்கள் இரவில்
மெலிதான போதை ஏற்றிக்கொண்டு
அதன் பின்புறத்தைக் கால்களுக்குள் வைத்து
கரமைதுனம் செய்துவிட்டால்
தரைதேய முகம்பதித்து கால்நக்கி
ஆயுள் முழுதும் நமக்கு அடிமையாய்
இருப்பதைக் காணமுடியும்
வலுத்த மரத்தடியினால் அதன் மூளைப்பகுதியில்
ஓங்கி அடிக்கும்போது
காதுகளில் இரத்தம் வடிய
செத்துப்போகும் நாயனது
பந்துகளை எடுத்துவர குட்மார்னிங் சொல்ல
ஆளைக்கண்டு குறுக்கு நெடுக்குமாய் ஓடி
வாலாட்டி முனங்குவது வகையிலான
பாவ்லாக்களையெல்லாம் நம்மை
ஏமாற்றவே செய்து காட்டுகிறது
நள்ளிரவில் சோடியம் போன்று நாயின் கண்கள் ஒளிர்ந்தால்
அது கானகத்தின் அமானுஷ்யத்தைக் காட்டி
நம்மை அச்சுறுத்துகிறது என்று அர்த்தம்
சிலசமயம் கத்தியால் நம் கைவிரலில்
காயம் ஏற்படும்போது
சொட்டும் ஒருசில இரத்தத் துளிகளை
மௌனமாய் நக்கிவிட்டுப் போகும்
நாயை என்ன செய்வது.






கொழுத்த பிராணி

ஒரு பொக்லைன் சாலையில்
ஊர்ந்துபோகும்போது
அதன் கண்கள் ஆக்கிரமிப்புக்களைக் கவனமாக
உற்றுப்பார்க்கின்றன
மேலும் தரையைத் தூர்க்கும் அதன்வாய்
டினோசர்களைப் போல குடிசைகளைக் கவ்வி
தூர எறிகிறது
கால்களை வலுவாக ஊன்றி தலையைத்திருப்பி
அலறிக்கொண்டிருப்பவர்களையும்
குரைக்கும் நாட்டு நாய்களையும் கொத்தி விரட்டுகிறது
கொழுத்த அரசுப்பிராணியான பொக்லைன்
கழுதையின் ராடுபோலத் தன் ஹைட்ராலிக்
தண்டுகளைப் புளுத்தி எக்கும்போது பொலபொலவென
கண்மயங்கிச் சரிகின்றன கட்டிடங்கள்
ஒரு கணம் தனது நாவைச் சரேலென நீட்டி
வாய்ப்புறத்து மணற்துகள்களை நக்கிவிட்டு
உள்ளிழுத்துக் கொண்ட பொக்லைன்
தலையைக் குலுக்கி
கழுத்தை ஒருமுறை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு
நாட்டுநாய்கள் பிந்தொடர புன்னகையுடன்
தன் மரவட்டைக் கால்களால் விரைந்துபோகிறது.






Sunday 21 October 2012

குட்டி ரேவதி.





ஆண்மை இல்லை

அன்று மழையோ மழை
நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்
அடிவயிற்றின் பயிர்மேடு
பரவசத்தில் சிலிர்த்து எழ
ரம்மியமான மந்தகாசப் புன்னகையை
உடலெங்கும் நழுவவிட்டபடி
மழை தரையிறங்கியது
நனைந்து உடலொட்டிய பாவாடையை
உயர்த்தி நின்றது காடு
ஓய்ந்த மழையை
அம்மாவின் சொல் மீறித்
திம்றிப்பறந்த பறவை சொன்னது
நினைவுகளின் தடயங்களை
மழையால் அழிக்க முடிவதில்லை
பகம் முழுதும், பின்னும்
அதன் பாடல் ஓயவேயில்லை
மகரந்தச் சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்
சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை.




நிர்வாணம்

உனக்கும் எனக்கும் அவளுக்கும்
நிர்வாணம் தான் பளப்பளப்பான ஆயுதம்,
குருதியின் வியர்வையில் நனையும்போதெல்லாம்
ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
மரங்கள் நிர்வாணத்தை யடையும்போதுதான்
இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
சீனப் போர்வீரன் சொல்லுவான்;
‘உறையிலிருந்து ஒரு போது
வாளை வெளியே இழுக்காதே
அவசியமின்றி’
நிர்வாணம் வளர வளரத்
தீயின் கொழுந்தைப் போல்.
நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
அது உன்னை அலைக்கழிக்கும்
உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
வாளை ஒருபோதும்
வெளியே இழுக்காதே அவசியமின்றி
அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்.
ஆனால் உன்னோடே
எப்போதும் வரித்துக்கொள் அதை.



Saturday 20 October 2012

பாதசாரி


      




மீனுக்குள் கடல்

என் மனக் குரங்குக்கு
உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது
என் யாக்கையின் காலம்

நேற்றிரவு வரை
மடங்காக்கத்தி
குரங்கின் கையில்
ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு
ஆதாம் கொடுத்தது

மீனுக்குள் கடலில் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ ஒரு விதமாய் ஒரு அசதியில்
கத்தி கைநழுவ குரங்கது
மெய் புதைந்து தூங்குகிறது

ஒரு விழிப்பின்  தருணம் திடுமென
குரங்கின் கனவில் புகுந்துவிட நான்

கண்டேன் ஒருத்தியை
திரை இன்றி
இலை தழை கூட மேலின்றி நிறை
நிர்வாணத்தில் ஒளிரக்கண்டேன்
அவளே என் அம்மாவும் அவளே என் 
தங்கையும் அவளே என் மனைவியும் அவளே
என் குழந்தையும் அவளே.....





  பெயர்

கடவுள் பெயரோ இயற்கை பெயரோ
சூரியன் பெயரோ சந்திரன் பெயரோ
சனியின் பெயரோ மலையின் பெயரோ
மரத்தின் பெயரோ தலைவர் பெயரோ
தாத்தாவின் பெயரோ ராக்கெட்டின் பெயரோ
செல்லப் பிராணியின் பெயரோ
சர்க்கஸ் கோமாளியின் பெயரோ
ஆணின் பெயரோ பெண்ணின் பெயரோ
போல் ஏதுமில்லை
என்னை நானே கூப்பிட்டுக்கொள்ளும் ஒரு பெயர்
ரகசியமில்லை அது-


ஒரு பிச்சைக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு விபச்சாரி என்னைக் கூப்பிடும்போது
ஒரு பைத்தியக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு குஷ்ட ரோகி என்னைக் கூப்பிடும்போது
ஒரு அனாதை என்னைக் கூப்பிடும் போது
என்னை நான் கூப்பிடும்போது…..




Friday 19 October 2012

கு.உமா தேவி






கடவுளின் கன்னியாஸ்திரி

தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன்செதில்களெனத் தரையெங்கும் வெண்துகள்
மிதந்துகொண்டிருந்தன

புற்றின் மேற்புறம் நீண்டுகிடக்கும்
வாய் மூடிய பாம்புகளைச் சிதைத்தெறியக்
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று

வலிகளை வரித்துச்சொல்லி அழத் தெரியாக்
கண்ணாடித் தேவதையின் உறைந்த பாதரசம்
வெற்றுத்தாளென
வெளியெங்கும் விறைத்து நிற்க
வாழ்தலில் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்துப் பிதுங்கிப்
பீய்ச்சியடித்த மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பாவக்கோடையைக் கடந்து கொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.



உறங்க முயன்றல்லாடுமோர் அடரிரவு



இடைவெளிகளற்றுப் பருத்துக் கனக்கிறது பருவம்
கூடவே உயிருறைய
நுண்வலியும் அப்பிச்செல்கிறது

சிறுகாற்றுக்கு அல்லாடும் பசுந்தழைகளாய்
மெல்லுரையாடலிலும் அதுவற்ற நிலையிலும்
முகத்தெளிவானது அறுபட

காலோய்ந்துத் திரும்பும்
பின்மாலைப் பொழுதில்
தாமத்தத்திற்கான காரணம் கேட்கும்
காப்பாளரின் கனிந்த பார்வைக்கு
ஏதேனும் சாக்கு சொல்லி

உள்துடிப்பில் உயிர் பொறி பறக்க
ஆடைநெகிழ்ந்தோடும் குளியறையுள்
தீய்ந்து கனக்க

சிறுநாசியில் மெல்ல நுழையும்
காமவாடை பழகாத அறையை
யாரோ தட்டிச்சென்றார்போல் தோன்றியது.

ஜெ.பிரான்சிஸ் கிருபா.






கடவுள் – கடல் – பரிசு

தனக்கென்று முடைந்திருந்த சின்னஞ்சிறு மரப்படகை
எனக்கென்று பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
உன் பாதைகளை வரைந்துவிட்டோம்
நீ பயணப்படலாம்.
வன்மம் மின்னும் உப்பு விழியுருட்டி கடல்
தன் பிரமாண்டத்தை உருவி பரிகாசமாகச் சிரித்தது.
நான் மிரண்டு என்னுடல் பயத்தில் நடுங்குவதைக் கண்டு
கடல்மேல் திரும்பி பரிகசிக்கும் பற்களைப்
பிடுங்கி எறிந்தார்

‘அவை இறுகிய கரும்பாறைகளாகக் கடவது’ என
எழுந்தது ஒரு கட்டளைக்குரல்.
அப்படியே ஆகிற்று.
திடுக்கிட்ட கடவுள் முகத்தைக் கடுமையாகத் திருப்பி
என்னிடம் கேட்டார் ‘ யார் நீ’
கண்களால் அவர் பார்வையை அதட்டியபடி
பணிவாகச் சொன்னேன்
இந்தச் சின்னஞ்சிறு மரப்படகுக்குச் சொந்தக்காரன்.



2 வானத்தைத் தோற்றவன்


பறவையொன்றிடம் நான் இன்று
பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு
வரவில்லை நிலவு.
நூல் பிறையளவு கொடையுமில்லை
எட்டிக்கூடப் பார்க்கவில்லை
யாதொரு நட்சத்திரமும்.
இப்படி பாழடைந்த வானம்
பார்த்ததேயில்லை இதற்கு முன்.
அவமானம் மிகுந்த இரவு
இதுவே கடைசியாக இருக்கட்டும்
சூதாடக்கூடாது இனி
வானத்தைப் பூமியில் வைத்து.


3

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்னெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடி கிணறுகள் தோண்டினால்
பீறீட்டடிக்கிறது ரத்தம்

கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.

Thursday 18 October 2012

எனதன்புக் கண்மணி ஆத்தாமார்த்திக்கு….





//தீர்த்த முனி என்பவருக்குக் கவிதை குறித்து எந்த விதமான புரிதல் இருக்கிறது எனத் தெரியவில்லை. முகநூலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற அளவில் அவர் எதை எதையோ கவிதைக்கான விமர்சனம் என்ற அளவில் செய்துவருகிறார்.//

பிறகு ஏனய்யா விமர்சனத்திற்கு உங்களது கவிதையை அனுப்பியதோடு வசுமித்ர கவிதையையும் அனுப்பினீர்கள். முகநூலில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதி அதைக் கவிதை எனச் சொல்லுவது சங்கடமய்யா. சத்தியம்தான் நான் படித்த புத்தகமய்யா சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவமய்யா


//அவரை முதல் முறை பிளாக் செய்து பிறகு அடுத்தமுறை அவரை அன்பிளாக் செய்து ..//

இது என்னய்யா… யாரோ எவரோ எதுக்கு பிளாக் செய்து அன்பிளாக் செய்து…ஒரே ரகளையாக இருக்கிறதே. உண்மையைப் போட்டு உடைத்தேன் என்பதற்காக வேறு வழியின்றி பிளாக் செய்து, உடனே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என அன் பிளாக் செய்து…சங்கரா…சங்கரா….

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…


//அவரது முக நூல் பக்கத்திலேயே நான் வசுமித்ர என்பவரின் கவிதைகள் இரண்டை எடுத்து அவரை விமர்சிக்க செய்தேன்.அவர் வசுமித்ரவின் கவிதைகளையும் தனக்கே உரிய குழப்பமான மற்றும் மேலோட்டமான வார்த்தையாடல்களால் விமர்சித்தார்.//


விமர்சனம் தெளிவாக உள்ளது ஆத்மார்த்தியாரே.
உள்ளதைச் சொல்வேன்…சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும்     தெரியாது.


//அதன் பின் அய்யப்ப மாதவனைப் பற்றி ஆபாசமாக தரக்குறைவாக எழுதினார்.//


அடக்கலிகாலமே….இதுதான் அய்யப்ப மாதவர் எழுதிய அருமையான வரிகள்…


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா…சுப்புரமுனி.

// “ தீர்த்த முனி என்ற பெயரில் ஒளிந்துகொண்டு தமிழ் இலக்கியவாதிகளை கிண்டல் செய்யும் நாதாரியின் உண்மையான முகத்தை விரைவில் கிழித்தெறிவோம். உண்மையில் துணிபு இருந்தால் உண்மையான பெயரில் வந்து விமர்சனம் செய் பெட்டை பையலே... இலக்கியம் என்ன உன் மனைவியிடம் எளிதாய் கிடைக்கும் சுகமென்று நினைத்தாயா மொல்லமாரியே... நேரே பார்த்தால் உன்னை எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன்”//

                   குங்குமப் பூவே கொஞ்சுப்புறாவே
                 தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் சொக்குது தன்னாலே….

//அதன் பின் மனோன்மணி என்னும் புது எழுத்து ஆசிரியர் தன்னிடம் ஒரு விமர்சனக் கட்டுரை கேட்டுவிட்டார் எனவும் அதற்காக இஸ்ரேலியம் என்னும் தொகுப்பை விமர்சனம் எழுதுவதாகவும் அடிக்கடி தன் சுவரில் தானே பதிவிட்டுக் கொண்டார்.//


அது உங்கள் கவிதையை எனக்கனுப்பி விமர்சனம் செய்..       விமர்சனம் செய்… என நீங்கள் ஞை ஞை ஞை என மண்டையைக் கிளறிக் கேட்டபொழுது  நான் இட்ட பதிலய்யா அது. ( கொசுறு தகவல் எனது விமர்சனம் புது எழுத்தில் வரவிருக்கிறது.அய்யா மனோன்மணி சொல்லியுள்ளார்.) நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே…


//அதன் பின் அவர் தற்போது எது கவிதை எது கவிதையல்ல என 7 பாயிண்டுக்களோடு தன் பிளாக்-இல் எழுதத் தொடங்குகிறார்.//

இந்த ஆறு பாயிண்டுகளையும் கோட்டை விட்டீரே…குப்பண்ணா…
இதுதானே கவிதைகளில் அடிநாதம், வெடிநாதம்.

1. சொற்களைச் செதுக்குதல், வடமொழிச் சொற்களை வலியத்திணித்தல்.

2 .வரிகளை அடுக்குவதிலும், வாக்கியங்களை அமைப்பதிலும்
   வித்தியாசங்கள்,  கவனமும் கவனமின்மையும்.

3 . விடுகதைப்பாணி, திடீர்ச்சுழற்சி,

4 . படிமங்கள், உருவகங்கள், தொன்மங்கள்

5. உரைநடையின் நேரடித்தாக்கம்.

6 சந்தம், நாட்டுப்புற பாடலின் சாயல்.

இதில் உள்ள குறைகளை நெஞ்சில் திறமிருந்தால், நேர்மைக் குணமிருந்தால், சுட்டிக்காட்டுங்கள் சுப்பண்ணா...

கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே…

//முகம் மறைத்துக் கொண்டு புகழ் விரும்பியாகவும் வக்கிர வெளிப்பாட்டாளனாகவும் இருக்கக் கூடிய தீர்த்த முனியின் நிஜ முகத்தை அறிய வேண்டுமென்ற ஆவல் என்னிடம் இல்லை.//

அதனால் தானே அய்யா இப்படிப் புலம்பித் தீர்க்கிறீர்கள்.

அவனா சொன்னான் இருக்காது அப்படி எதுவும் நடக்காது…நம்பமுடியவில்லை.


//தீர்த்த முனியின் நோக்கமே ஆத்மார்த்தியை வம்புக்கு இழுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பற்றியும் என் முக நூல் கவிதைகளைப் பற்றியும் தாறுமாறாக எழுதுவது மட்டும் தான் என எண்ண வைக்கிறது.//

இதுதானய்யா அசிங்க வக்கிரம். நீங்கள் எழுதியதை குறை சொன்னதினாலேயே மீசையில் மண் ஒட்டவில்லை, நானே பெரியாம்பிள என்கிற உங்களது பெருமை. தாறுமாறாக நான் எழுதிய ஒரு வரியைச் சுட்டுங்களேன் அய்யா…

ஒரேமுறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன் நீயொரு தனிப்பெறவீய்….

//நானாக பதில் அளிக்க வில்லை என்றால் என் சுவருக்கே வந்து ஐய்யா இது கவிதையா எனக் கேட்கிறார்.//

                 கவிதையாய் இருந்தால் கேட்டிருக்க மாட்டேனய்யா.

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்…


//நான் எழுதுவதை எல்லாம் கவிதையா என இவர் ஏன் அளக்க விரும்புகிறார்..?//

                     நீங்கள் அதைக் கவிதை என பொய் சொல்லுவதால்தான்….

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா…மனிதன் தானா இல்லை..நீதான் ஒரு…


//என் மீது தான் குறி வைக்கிறார்.//

                  ஒரு குறியும் இல்லை….எனக்கு பல குறிகள் உள்ளது.

எங்கே அவள் என்றே மனம் தேடுதா ஆவலாய்..ஓடிவா…


//அதற்கு தன்னை விமர்சகன் என்ற போர்வைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு ஏதோ இலக்கிய உலகத்தைக் காக்க வந்த அருளாளன் போலவும் மீட்க வந்த மீட்பன் போலவும் தன்னைத் தானே சித்தரித்துக் கொள்கிறார்.இவரது நோக்கம்,எப்படியாவது மீண்டும் மீண்டும் என் எழுத்துக்களை விமர்சனம் என்ற பெயரில் "இதெல்லாம் கவிதை இல்லை.உனக்கு எழுதத் தெரியவில்லை.நீ இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டும்.உனக்கு கவிதை எதிர்காலத்தில் கைகூடும்.இப்படி எழுதுவது குப்பை.இது கதை சொல்லல்.இது கவிதையா இது கவிதையல்ல.."இவருடைய மொத்த தொனியும்
இவ்வாறாக இருக்கிறது.தான் சொல்லுகிற இடத்திலும் ஆத்மார்த்தி கேட்கிற இடத்திலும் இருக்க வேண்டும் என விரும்புகிற ஒரு வக்கிரமுனி தான் இந்த தீர்த்தமுனி.//

                       சுப்பண்ணா…நான் போர்வைக்குள் எல்லாம் ஒளியவில்லை. பப்பளக்கா என திரந்து போட்டுத்தான் விமர்சனம் செய்துள்ளேன். அய்யோ ஆத்மார்த்தியாரே.. இந்த வக்கிரத்திடம்தானே உங்கள் கவிதையை விமர்சனம் செய்யச் சொல்லி, அய்யா…. எனக் காத்து நின்றீர்.

ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா..நாதமா…கீதமா…


 //இதற்கு பின்னாலும் தீர்த்த முனி எதை எழுதினாலும்...என் கவிதைகளை என் எழுத்துக்களை எதுவுமே எழுத்தில்லை எனக்கு எழுதத் தெரியவில்லை என்ற அளவிற்கு எதை சொன்னாலும் அதனை முழுவதுமாக இங்கேயே பொருட்படுத்தி விடலாம் என்று எண்ணுகிறேன்.ஆம் நண்பரே...என்னை நிராகரியுங்கள்.நான் எழுதுகிற எதுவும் எழுத்தல்ல.எதுவும் கவிதையல்ல.நீங்கள் சொல்வது சரி தான்.எனக்கு எதையும் கற்றுக் கொடுத்து விடலாம் என்றோ என்னைத் திருத்தலாம் என்றோ எண்ண வேண்டாம்.நான் இப்படியே தான் இருப்பேன்.//

உங்கள் குணத்தை மாற்றுவது உங்கள் விருப்பம் அய்யா அதில் எனக்கு எந்த நட்டமும் இல்லை….ஆனால் அவைகளை கவிதைகள் எனச் சொல்லி….ப்ச்…பாவம். நான் உங்களைத் திருத்துவேன் என கனவிலும் நினையாதீர்.

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க..

 //நான் விமர்சிக்கிற யாரையும் நான் நேரடியாக என் முகம் காட்டி...என் சொற்களை நேரடியாக எடுத்துவைத்து விமர்சிப்பது தான் என் வழக்கம்.//

இதுவரைக்கும் யாரை அய்யா அப்படி முகத்தைக் காட்டி விமர்சித்துள்ளீர்கள். எல்லாம் ஒரே பீப்பி சத்தமாக அல்லவா இருக்கிறது.

நலந்தான நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா..

//இது என் நேர்மை.குறைந்த பட்ச விமர்சன அறம்.முகத்தை மூடிக் கொண்டு கல்லெறிவது என்பது கோழையின் செயல்.//

ஆமாம் ஆத்தாமார்த்தியாரே… யுத்தக் களத்தில் முகம் தேவையில்லை அய்யா…அப்படி எழுதிய எழுதிக்கொண்டிருக்கிற நூறு பேரை என்னால் அடையாளம் காட்ட முடியும்.உங்களைப் புகழந்து, பீப்பியடித்த பெயர்களையும் சேர்த்து.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன தீர்த்தமுனி வரியழகா இல்லை…உளியழகா..சாமி…


//நான் கோழையல்ல.தீர்த்த முனி ஒரு கோழை.என் கவிதைகளை நிராகரிப்போம்.தீர்த்த முனி என்னும் நபருக்கு ஒரு சுயமுகம் உண்டல்லவா..?//

மனோகரா…. பொறுத்தது போதும் பொங்கியெழு…
                       
                        வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்து பகை முடிக்கும் சூர வேல்…


//அதை அவர் தைரியமாக வெளிக்காட்டட்டும்.இதற்கான தைரியம் அவருக்கு இருக்கிறதா..?//

உங்களுக்கு உண்மையிலேயே ஒரு கவிதை எழுத தைரியம் இருக்கிறதா?

இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு..ரகுபதி ராகவ ராஜாராம் பசுபதி பார்க்க சிரித்தாராம்…

//கண்டிப்பாக இருக்காது.தண்ணீருக்குள் குசு என்பார்.மலம் என்பார்.//

ஏனய்யா இதெல்லாம் உங்களுக்கு வராதா.ஆரோக்கியமான உடலுக்கு இது அழக்கல்ல அய்யா.

            தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…

//சமூக அக்கறை என்பார்.//

உங்களுக்கு கவிதை அக்கறை போல, எனக்கு சமூக அக்கறை..கொஞ்சம் சர்க்கரை.

ஜெய் ஹோ....ஜெய் ஹோ....

//வீட்டுப் பெண்களைப் பற்றித் தவறாக எழுதுவார்.//

எங்கே அய்யா எழுதினேன்…    ( ஒரு வரியைச் சுட்டுங்கள்)    நீங்கள்தான் வருடும் சலங்கை என ஒரு அசிங்கத்தை எழுதினீர்கள்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே…




//ஒரு மனிதனை எந்த அளவிற்கும் விகாரமாக அருவெறுக்கத் தக்க அளவில் எழுதும் உரிமையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வார்.//

உங்களைப் பற்றிச் சொல்லுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை அய்யா.. அதில் எங்கே அய்யா வக்கிரம் இருக்கிறது. கண்ணாடி பார்க்கும் வழமையுண்டோ அய்யா.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்…உண்மை சொல்லாதது.


 //இன்னும் இருபத்து நாலு மணி நேரம் தருகிறேன் என் நண்பர்களுக்கு...தீர்த்த முனியை நண்பர்களாகக் கொண்ட யாருடனும் எனக்கு நட்பு தேவையில்லை.நான் அவர்களையும் தீர்த்தமுனியாக எண்ணி பிளாக் செய்வேன்.இனி தீர்த்த முனி பற்றி பேச என்னிடம் எதுவும் இல்லை.என் எழுத்துக்களைப் பற்றி அவர் எதை சொன்னாலும் அதை பொருட்படுத்தப் போவதில்லை.//

நீங்க ஏய்யா.. அதப் பொருட்படுத்தனும். ரெண்டு மூணு கவிதைய விமர்சனம் பண்ணு தீர்த்தமுனின்னு எனக்கு அனுப்பணும்….கொடுமை கொடுமை….

ஆடிப்பாரு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா…வெளி வேஷம் போடாட்டா....


//"நேர்கொண்டு வா,பகையே, மார்பிளந்து நீ போடா...முதுகுக்கு குறிவைப்பது என்றென்றும் கோழைகள் செயலல்லவா..?"//

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

அய்யா ஆத்மார்த்தி பாணபத்திரரே..உருப்படியாய் எழுதுவதற்கு யோசிப்பதை விட்டு முகத்தை காட்டு, பாஸ்போர்ட் போட்டாவைக் காட்டு என்பதெல்லாம் காமெடி அய்யா….உங்கள் அழகு முகத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்…சொல்லுங்கள்…

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதினேன்..காற்றில் நானே…



தங்கள் மனங்கவர்ந்த
அன்போடு
தீர்த்த……முனி…………………………..




ஆத்தாமார்த்தியாரே…
கீழ்காணுபவைகள். நீங்கள் எழுதிய வருடும் சலங்கை என்கிற ஒரு மூன்றாந்தர வரிகளைக் குறித்து… நான் வரைந்த கொஞ்சும் சலங்கை விமர்சனம்…


...................கவிதையில் ஆணாதிக்கத்தை வரவேற்றோ அல்லது வெறுத்தோ அல்லது உரத்த குரலில் போற்றியோ சொல்லட்டும். ஆனால் கவிதை சொல்லக் கூடாது அதன் தன்மை குரல் அல்ல. வார்த்தைகள். குறியீடுகளை வைத்து தத்துவங்கள் பேசட்டும். கவிதையில் உள்ள குறியீடுகளை கவிதை தன்னை வைத்து எடைபோட்டுக்கொள்ளும்.

அதே போல் இது பெண்களுக்கு மட்டுமல்ல இப்பொழுது மும்பை மாநாகரங்களில் ஏன் இப்பொழுது சென்னையிலும் கூட விபச்சாரகன் இருக்கிறார்கள். இது பொதுத்தன்மையல்ல, அப்படத்தை ஒரு பெண் பார்க்கும் விதத்தை அங்கு கவிதையாக்க ஏராளமான இடமிருந்தும் அதை ஆணின் பார்வையில்தான்…இன்னும் ஒரு பத்திரிக்கையாளன் பாணியிலான மொழியையே நீங்கள் அங்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்,  காமத்தில் பெருங்கதையாடல் சிருகதையாடல் விளிம்பெல்லாம் அல்ல. அவை உபயோக்கிக்கும் களத்தைப் பொறுத்து அமையும். மேலும் நீலப்படங்களைப் பொருத்தவரை ஆண்களும் பண்டங்களே. வருடும் சலங்கையை பெண் அணிவது எவ்வளவு முக்கியமாகப் படுகிறதோ. அங்கு அதே அளவுக்கு ஆணின் குறிவிரைப்புக்கு லோஷன் போன்ற இன்னபிற சகல இத்யாதிகளும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அங்கு நிகழ்வது நீங்கள் சொல்லுவது போல் அல்ல. ஆணின் நிர்வாணத்தை ரசிக்க பெண்களுக்கும் இடமுண்டு.

நீலப்படங்களை நீங்கள் வகைபிரித்துக் கண்டதில்லை என நினைக்கிறேன். இங்கு அதிக அளவில் வெளியிடப்படும் மலையாளப்படங்கள் வகையிலான படங்கல் மார்பை மட்டுமே நம்புகின்றன. நீலப்படங்களில் தத்துவத்தை செயல்படுத்தி கவிதையக் கொணரும் படங்களும் உண்டு உங்களுக்கு பல ப்ரென்ச் படங்கள சிபாரிசு செய்யலாம். இதன் மூலம் பல்வேறு செய்கைகள், உண்டு காம வகைப்பாட்டில் எக்கச்சக்க வழிமுறைகள் உண்டு அது தற்சிதைவிலிருந்து கொலைக்கலத்திற்கு தாவும் வகையினங்களாக நிறைய உண்டு அன்பரே. பேசுவோம்...............


இதில் எங்கே அய்யா எனக்கு கவிதை குறித்த புரிதல் தவறாக இருக்கிறது. இது அதை விடக் கொடுமை அய்யா…கொடுமை….


நீங்கள் எழுதியதிலேயே என்னை சிரிக்கவைத்தது இதுதானய்யா…


// நான் தீர்த்த முனியின் நண்பர்கள் -பட்டியலில் ஒரே ஒரு பெயரை மட்டுமே பார்க்கையில் வயிறு எரிந்தேன்.அந்த ஒரு நபர் அந்த பட்டியலில் இருந்து வெளியேறுவது கடைசியாகவேனும் நடக்கவேண்டும் என்பது என் ஆவல்.ஆனால் இந்த நோட்சை நான் பதிவிட்ட அடுத்த கணமே அந்த நபர் திருவாளர் தீர்த்த முனியை தனது பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்.எனக்கு அது போதும்.அந்த நபர் யாரென்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.அவர்,,என் 2330 நண்பர்களில் தலையாயவர்.என்னை கண்டுபிடித்த பாவி.என் முதல் கவிதையை அச்சில் வார்த்த சாத்தான்.அவர் பேர் சுதீர் செந்தில்.அவரிடம் இருந்து தீர்த்த முனியை காப்பாற்றவே அங்கனம் செய்தேன்.//

அய்யா சுப்பண்ணா... யாரந்த சுதீர் செந்தில். என்னமோ…ஒரே காமெடியாய் இருக்கிறது. இந்தக் காமெடியை நம்பி அவர் என்னை முகப்புத்தகத்தில் இருந்து தூக்கிவிட்டால் நீங்கள் மோட்சமடைந்து விடுவீர்களாக்கும். எங்கே உங்கள் கவிதைகளுக்கு நான் எழுதிய விமர்சனம் பார்த்து அவர் வாழ்நாளில் தான் செய்த தவறு உங்கள் கவிதைகளை கவிதைகள் என நம்பிப் போட்டோமே என்கிற உங்களது பயம்தானய்யா இதில் தெரிகிறது…அவர் என் விமர்சங்களைப் படித்தால் நிச்சயம் பாவி உன்னையா ஒரு கவிஞன் என நம்பினேன் எனச் சொல்லவும் கூடும்…


அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா…


அய்யா குப்பண்ணா....ஒரு சந்தேகம்…தீர்த்த முனியை வெட்டி விடு இல்லையெனில் அத்துவிடுவேன் எனக் கச்சை கட்டினீர்களே அப்படி எத்தனை பேர் அத்துவிட்டார்கள்… தகவலே இல்லையே சுப்பண்ணா. கடைசியில் சுதீர் செந்திலைக் காப்பாற்றினேன்…என்னைக் காப்பாற்றினேன் என விழுந்தடித்துக் கொண்டு, என்னையல்லவா தொடர்பறுத்துப் சென்றிருக்கிறீர்கள்….யாழி கிரிதரன் உங்கள் பிழையைச் சுட்டியிருக்கிறார் அய்யா..அதோடு உங்களது அகம்பாவத்தையும்….


யாரையும் யாரிடமும் இருந்து காப்பற்ற இதில் எங்கே அய்யா வேலை இருக்கிறது.

அய்யா உங்களைப்பற்றி ஒரு உண்மை.

பாவம்....ஒரு கவிதைதான் எழுத வரவில்லை,  உள்ளதைச் சுட்டுவோம் எனப்  பொறுப்போடு உதவிகள் செய்தேன். இப்பொழுதுதான் தெரிந்தது…உங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதத்தெரியாதென்று…ப்ச்…பரிதாபம்…என்ன செய்வது…நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்ல அடிமைகள் ஆனால் காதுதான் பேனா வரைக்கும் இருக்கிறது….என் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் இன்னும் உங்களது நட்புப் பட்டியலில் இருப்பதாக தகவல் அய்யா…



வாரான் வாரான் தீர்த்தமுனி
பேஸ் புக் வண்டியிலே
விமர்சனம் பார்த்து நடுங்குனது
யாரு மண்டியிலே

குதிரைவண்டியிலே
பேஸ் புக் வண்டியிலே
மூஞ்சி வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா

பக்கத்து ஊரு தாண்டி
பள்ளம் மேடு தாண்டி
குதிச்சு வராண்டி– பேனா
புடிச்சு வராண்டி..

ஏய்..

வரான் வாரான் தீர்த்த முனி
மூஞ்சி வண்டியிலே
மானம் காத்து ஒடிப்போனார்
குதுர வண்டியிலே..

மாடு வண்டியிலே- முக
நூலு வண்டியிலே....