Wednesday 31 October 2012

அய்யா திருமிகு நேசமித்ரன் மித்ரா அவர்களுக்கு





அய்யா எனது வரவில்லாமல் போனதால் தாங்கள் வருத்தமடைந்து எழுதிய பதிலைக் கண்டேன் அய்யா. உங்களுக்காகவாவது சில விமர்சனங்களைச் செய்ய கடமைப்பட்டவன் ஆகியிருக்கிறேன் அய்யா.


இப்படித்தானய்யா ஒரு ஆரம்பகட்ட விமர்சகனை வாழ்த்தி வரவேற்று பரவசமளித்து உற்சாகப்படுத்தவேண்டும். உங்களது அன்புக்கு எனது விறைப்பெடுத்த சல்யூட் ஒன்றை வைக்கிறேன். அய்யா எனது விமர்சனங்களில் அடிக்கடி அய்யப்ப மாதவர் புலம்புவதும், நீங்கள் இப்போது சொல்லுவதும், இன்னும் எண்ணற்ற முகநூல் கவிஞர்கள் அய்யோ, அம்மா கொல்லுறான்…கொல்லுறான் என அலறுவது ஒன்றே ஒன்றுதானய்யா, நான் தனிமனித தாக்குதல் செய்திருக்கிறேன். இதைத்தானய்யா உளறி வருகிறார்கள். அய்யா நீங்களாவது அன்பு கூர்ந்து எனது விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் இருந்தால் ஒரு வார்த்தையைச் சுட்டுங்கள் அய்யா…தாழ்பணிந்த மன்னிப்பை மனமுவந்து கேட்பேன் அய்யா. அய்யா பெட்டைப் பயலுக்கு லைக் இட்ட நீங்கள் பின் அதை நீக்கியது உங்களது மாண்பைக் காட்டுகிறது அய்யா. இதற்கு அய்யப்ப மாதவர் குமுறிக் கொந்தளித்து காத்துவிடுவதும் செவிகளுக்கு விருந்தாகிறது அய்யா.

அய்யா நீங்கள் சொல்லியபடி தமிழில் கவிதை விமர்சகர்கள் தம் மேலான நேரத்தையும் உழைப்பையும் ஈந்து தொண்டாற்றுவது வரவேற்கத்தக்கது . ஒரு கவிதையை கவிதை அல்ல என்று சொல்ல ஒரு வாசகனுக்கு முழு உரிமையும் உண்டு . தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன். இந்த நம்பிக்கையை ஆளுக்கொரு வாய் ஊட்டிவிடுங்கள் அய்யா.

//மேற்குறிப்பிட்டபடி தனிமனித அவதூறுகள் ,தாக்குதல்களை வெறுக்கிறவனாகவே துவக்கம் முதல் உள்ளேன்//

அய்யா, இதைத் தாங்கள் அடிக்கடி கண்ணியமான குரலில் ஒரு நல்ல நுவலென சொல்லி வருகிறீர்கள். ஆனால் அந்த ரியாஸ் குரியான இருக்கிறதே அது லூசா என்று கேட்டதும் உங்களின் மிருக குணம் சட்டென முட்டைக் கண்ணை விழித்துப்பார்த்து அது சொன்ன தனிமனித அவதூறானா லூசா அய்யா என்பதற்கு லைக்கைப் போட்டு விடுகிறதய்யா…

அய்யா உள்ளே மிருகம் இருக்கிறது, சற்று அதட்டி வையுங்கள் அய்யா. நினைவில் மிருகமே உள்ள மனது, கடித்து வைப்பதோடு, குதறி வைக்கும் அபாயமும், ஆபத்தும் ஒருங்கே இருக்கிறதய்யா, உடனே நீக்கிவிடுங்கள். இதை உங்களுக்கு மட்டுமல்லாது உடன்பாடோடு லைக் இட்ட தனிமனித அவதூறை பழுது நீக்கி வெறுப்பவர்களான அய்யாக்களும், இது சின்னப்பய விசயமப்பா என பதில் ஏதும் சொல்லாத அண்ணன் ராசு மற்றும் நண்பர் செல்வம் இன்னும் தூரத்து உறவு வாசு தேவன் அய்யாக்களுக்கும் அறிவிக்கிறேன் அய்யா.

அய்யா இந்த ரியாஸ் குரியான இருக்கிறதே ரியாஸ் குரியானா..அது பொதுச் சுவற்றில் கழியும். பின் தனியே பெட்டிச் செய்தியில் வந்து மன்னிப்பு என்கும். கோபித்து விசர் பிடித்து என்னைத் தடை செய்யும். பின் கொஞ்சிக்கொண்டு காலைக் கட்டும். அது ஒரு காமெடி பீஸ் அய்யா.

அய்யா இதுகளை விடுங்கள். தனிமனித தாக்குதலை செய்யமாட்டேன் நான் உத்தமர் என்று உரைத்த நீங்களே அது லூஸா என்றால் அதற்கு லைக் இடுகிறீர்கள். அதிலும் பாருங்கள் அது ஒரு பிரதிக்கவிஞர் என தனக்குத்தானே தனது வாயில் புலம்பிக் கொண்டிருக்கிறது. அய்யா அது சொல்வதைக் கவனியுங்களேன். அய்யா சற்று நின்று பொறுமையோடு கவனியுங்கள். அந்த முற்றும் தெளிந்த தெளிவு உரைப்பதைப் பாருங்கள்.

அது சொல்கிறது...

// நேசமித்திரனின் கேள்வி முக்கியத்துவம் மிக்கதாகத் தோன்றவில்லை.அதற்கு உங்களின் பதில் பொறுப்பற்றது.//

என்னய்யா இது கொடுமை. முக்கியத்துவம் இல்லாத கேள்வியாம், ஆனால் நான் பொருப்போடு வந்து பருப்பெடுக்க வேண்டுமாம். எனது கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் முக்காடு போட்டு என்னை தடை செய்த அது, இப்பொழுது முக்காட்டை நீக்கி திருட்டு முழி முழிப்பது ஏனோ அய்யா. முக்கியமில்லாத கேள்விக்கு பொறுப்பான பதிலைக் கூறு எனச் சொன்ன அது லூசு எனப் பேசுவது எந்தப் பொறுப்போடு அய்யா.


அதோடு மித்ரனய்யா தாங்கள் எனக்கு அன்பு கூர்ந்து நல்ல விமர்சனம் இது கெட்டவிமர்சனம் இது நடுநிலைமை ஓர நிலைமைகளை எல்லாம் நான் பொருப்படுத்தியே பதில் சொல்கிறேன் அய்யா எனது கவிதை குறித்த விமர்சனங்கள் எனது வலைத் தளத்தில் உள்ளதய்யா


கவிதை பற்றி நான் உரையாடிய சான்றுகள்;

1 நவீன கவிதையிலிருந்து தப்பிக்க… அய்யாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பாலற்ற மாந்தர்களுக்கும்…..

2 கவிதையில் கனவு என்பது நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையுமல்ல உணர்ச்சியுமல்ல.ஆனால் அது கனவு சாராத தடையற்ற தொடர்புகள் ஆகும். கனவில் உள்ள …

3 சலனங்களின் வரைபடமாக இக்கவிதையைச் சுட்டுகிறேன்.

4 வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....

5 கவிஞர்- ஆத்மார்த்தியின் வருடும் சலங்கை - யை விமர்சித்து

அய்யா இது சாம்பிள்களய்யா இன்னும் இது போன்ற பல தலைப்புகளில் எழுதியிருக்கிறேன். நான் கவிதைகளாக் கருதுபவையென அகநாழிகை வாசுதேவன் தொடங்கி பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதியென சில கவிதைகளையும் இட்டுள்ளேன் அதிலும் உங்களுக்கு விமர்சிக்க ஏதேனும் இருக்கலாமய்யா. தாங்கள் சற்று சிரமம் பாரது வருகை தந்து எனது விமர்சனங்களில் ஒளிந்துள்ள தனிமனித அவதூறுகள், இன்னும் காய்தல் உவத்தல் நடுநிலைமைகள் இவைகளைச் சுட்டினால் ஒரு ஆரம்ப கட்ட விமர்சகனான எனக்கு அது உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அய்யா.
அய்யா நான் நீங்கள் கவிஞராய்யா எனக் கேட்டதற்கு நண்பரும் அண்ணனும் என்னைக் கவிஞர் என்று சொல்லுகிறார்கள் என பதில் நுவல்ந்திருக்கிறீர்கள் அய்யா…நண்பர் அண்ணன் பெரியப்பா சித்தப்பா அவர்களது உடன்பிறந்தவர்களிடம் நான் கேள்வி கேட்கமுடியுமாய்யா. நான் கேள்வி கேட்டது உங்களிடம் அய்யா. இப்பொழுதாவது சொல்லுங்களய்யா நீங்கள் கவிஞரா அய்யா.

பொறுப்போடு பதில் சொல்லுவதோடு, அடிக்கடி எனக்கு விமர்சகப் புத்தி இப்படி இருக்க வேண்டும் என உரைத்ததைப் போல நானும் விமர்சகனாய் கவிதை எப்படி என எனது வலைப்பக்கத்தில் உரைத்திருக்கிறேனய்யா. பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் சொன்ன காய்தல் உவத்தல் இன்னும் பழுத்தல் இருந்தாலும் வாங்கிக்கொள்கிறேன் அய்யா லூசா என்பவருக்கு லைக் இடும் உங்களது உள்ளம் மிக டைட்டாக இருக்கலாம். மனதைச் சற்றுத் தளர்த்தி நீங்கள் கவிஞரா அய்யா என்ற கேள்விக்குப் பதில் சொன்னால் மிக பதமாக அன்பாக எனது விமர்சனங்களைச் சுட்டுவேன் அய்யா.
நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு எனது மாமா பதில் சொல்லிவிட்டார் என்றால் உங்களுக்கு வருத்தம் வருமா வராதா அய்யா...

அய்யா உங்களது வலைப்பக்கத்தின் தலைப்பு நேசமித்ரன் கவிதைகள் என உள்ளது அய்யா… நீங்கள் கவிஞரா அய்யா என்பதை ஒரு சிறு வேண்டுகோளாகக் கொள்க, அய்யா இக்கேள்விக்கு அண்ணன் ராசு, மற்றும் அருமை பெரியப்பா, சிறுமை சித்தப்பா, பக்கத்துவீட்டு நண்பர் இவர்களைக் கூப்பிடாமல் நீங்களே உங்கள் அன்புவாய் திறந்து அருள் பாலியுங்கள் அய்யா. நல்ல நுவல்தல்களை நானுரைப்பேன் சத்தியத்தோடு. ஏனென்றால் அய்யா நீங்கள் இரு கேள்வி கேட்டு பதில் அளித்தவன் நான் என் ஒரு கேள்விக்காவது பதில் சொல்லும் கடமைப்பட்டவர் நீங்கள்.( அய்யா, நான் தானய்யா தங்களிடம் முதல் கேள்வி கேட்டேன் இன்னும் பதில் தகையவில்லை. இதற்கிடையில் நீங்கள் இரு கேள்விகளை வைத்தீர்கள் நான் பதில் சொல்லியிருக்கிறேன்.)

அய்யா முகநூல் கவிஞர் என்றதும் அதை அசிங்கமாக நினைத்துப் பதறி இன்னும் உள்ளுக்குள் புழுங்கி அசிங்கத்தை உளறிய அய்யப்பமாதவர் எனக்கு இன்னும் நாலு வரி பதில் எழுதாமல் காக்கா தவளை எனப் பேசுவதோடு

பார்க்கும் இடமெல்லாம் தீர்த்தமுனி
உன் பேரைக் கண்டால் பதறுதடா தீர்த்தமுனி
உள்ளம் பதறுதடா…
கவிதை கசக்குதடா
முனி காலி செய்தாயடா

எனப்பதறி இன்னும் தனது பக்கத்தில் பெட்டைப்பயல் என அந்த ஆம்பளைப் பயல் சொல்லி வருகிறது. அதற்கும் நீங்கள் அன்பாய் பேசுவது எப்படிக் கனிவாய் பேசுவது எப்படி என ஒரு பாடம் நடத்துங்கள் அய்யா. அதை நான் எதிலோ மிதித்துவிட்டது போல் குரைத்துத் திரிகிறது. அப்புறம் அய்யா உங்களது கவிதைய ஏற்றுக்கொண்ட ராசு அண்ணன் மற்றும் நண்பர் இன்னும் செல்வன் மற்றும் ஏனையோருக்கு உங்களது கவிதைகளை எப்படி கவிதைகள் எனச் சொன்னார்கள் என்பதை தீர்த்தமுனியின் வானொலியிலிருந்து விமர்சனச் சேவை செய்ய அமைதியோடு காத்திருக்கிறேனய்யா. அவர்களும் கவிதைதான் அது என விளக்க வேண்டும்.

அய்யா அண்ணன் ராசுக்கு.
நீங்கள் இடையில் ரெண்டு வரியை பிராய்ஞ்சு போட்டு இது கவித கவித என்றால் நானும் இன்னும் பல வரிகளை பிராய்ஞ்சு கவிதையே இல்லை எனப் பேசி நிரூபித்து, கட்டிய மனக் கோட்டையை உடைக்க முடியும் அய்யா. பேசலாமா அய்யா…

அய்யா செல்வம் மாணிக்கமய்யா
காசு வாங்கிட்டு கவிஞ கவிஞ.. கவுத கவுதன்னு கூவுறது மாதிரியேக் கீதே…ஆவ்வ்வ்வ்வ்.ஜிவ்…பவ்..மண் கவ்...

ரியாஸ் குரியானா…தெளிவாக்கீதா..

மாட்டுத்தலை அமானுஷ்யருக்கு…ச்சீ…போ


அய்யா மித்ரனய்யா நீங்கள் விமர்சகர்கள் குறித்து சொன்ன பல வாக்கியங்கள் எனக்கு உங்களுடன் உரையாடும் தகுதியை நான் இழந்து விட்டதை தெரிவிக்கிறது என்று நான் கூறமாட்டேன். எனக்குப் பேசுவதற்கு நிறையப் பிடிக்கும். பேசுவோம் அய்யா

திருமிகு நேசமித்ரன் மித்ரா அய்யா…எனது கேள்வி ஒன்றுதானய்யா. நீங்கள் கவிஞராய்யா?பதில் சொன்னால் உங்கள் வருத்தங்களை போக்கி நான் பேச மகிழ்ச்சியான அன்போடு வருவேன் அய்யா….
அய்யா உரையாடலாம் அய்யா...

No comments:

Post a Comment