Friday 5 October 2012

கடற்கன்னி.






அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
நிர்வாணமாக அவள் நுழைந்த போது
அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன சப்தமின்றி
அவள் வெளியேறினாள்
கடைசியில்
அந்தக் கதவு வழியாக
நதியைச் சென்றடையுமுன்னரே
அவள் தூய்மையாகிவிட்டாள்
மழியில் நனைந்த  வெள்ளைக் கல் போல
மீண்டுமொருமுறை
மின்ன
நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
சூன்யத்திற்குள்
அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.




கவிதை கேட்டவர்களுக்காக...
முக்கியமாகஆத்மார்த்தியின் அடிப்பொடிகளான மாட்டுப்புத்திரர், நாட்டாண்மைக்காக.

No comments:

Post a Comment