Monday 15 October 2012

முகநூல் கவிஞர்களின் சுயரூபம்.




வாசகக் கண்மணிகளே.... வந்த சில நாட்களாய் நான் எழுதியது முகநூல் கவிஞர்களின் கவிதைகளுக்கு நான்கு கவிதைகளுக்கு விமர்சனம். அடியேன் செய்தது அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் நான் வேறெதுவும் செய்யவில்லை. ஆனால் முகநூல் கவிஞரய்யாக்கள் எனக்குச் செய்தவைகள் இவைகள்.

1 வா. மணிகண்டன் கொசு என்றார்,

2 ஆத்மார்த்தி நான் தவறாக கவிதைகளைப் பார்க்கிறேன் என்றார். பதிலுக்கு இன்னும் விளக்கம் சொல்லவில்லை. அது தண்ணீருக்குள் விட்ட குசுவாகவே இருக்கிறது.

3 நிலா ரசிகரய்யாவை ஆளையே காணவில்லை

4 அய்யப்ப மாதவன் பெட்டைப் பயலே என்றார். எனது படுக்கயறைக்குள் நோட்டமும் விட்டார்.

5 வேல்கண்ணன் பிணி என்றார்.

இவர்கள் அனைவருக்கும் எனது விமர்சனக் கனிவான வணக்கம்.

என்ன கொடுமை அய்யா இது... உங்கள் கவிதைகளை விமர்சனம் செய்தால் இதுதான் பதில் விமர்சனமா....இது போதாதென்று அய்யா சிபிச்செல்வன் ஈமு கோழி, குதிரை என்று ஏதோ உளறியதோடு தீர்த்தமுனியை இந்தா நெருங்கிவிட்டேன் அந்தா நெருங்கிவிட்டேன் என்றார். அய்யா அவருக்கு பதில் வைத்தும் அது காணாமல் போய்விட்டது. இதுவெல்லாம் போதாதென்று ஏதோ வயிற்றுக்கடுப்பு வந்தவன் வெளியூர் சென்று கழிவறை தேடி அலைந்த கதையாய் எனக்கு கவிதை வந்தது என்று குமுறிக்கொண்டிருக்கிறார். நான் இவர்களை பொருட்படுத்தினேன். நாளையக் கவிக் கண்மணிகள் என எண்ணி எழுதினேன். ஆனால் அது காமெடியாகிவிட்டது. நான் யாரிடம் உரையாடியிருக்கிறேன் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது செல்லங்களே...

வாசகக்கண்மணிகளே...இதுவரை எனது முக நூல்கணக்கு இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டுவிட்டது. ஹேக் செய்வது எப்படி என எனது விமர்சனத்துக்கு பதில் சொல்லாது கம்மென்றிருக்கும் தங்கங்கள், செல்லங்கள் வைரக்குட்டிகள் அறிவார்கள்.


நான் கவிஞராக்கும் என்று கொந்தளித்துக் குமுறும் இவர்களின் அன்பு மனம் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன். அதிலும் இந்த அய்யப்ப மாதவனய்யா அவர்கள் பெட்டைப்பயல், செறுப்பென்று உளறியதோடு இப்பொழுது நான் புணர்ந்த பின் பெண்ணென்பவள் யார் என்கிற உலகத்தத்துவத்தை உச்சுக்கொட்டிச்  சொல்கிறார். பார்க்க பார்க்க பரிதாபமாக இருக்கிறது கண்மணிகளே. அவர் பக்கங்களெங்கும் கவிஞர்கள்தான் நாளைய உலகை ஆளவேண்டும் எழுதும் கரங்களே எனப் பாடலைப் பாடி மற்ற அனைவரையும் தண்டங்கருமாந்திரங்கள், நாசமாப் போய்ச் சாகட்டும் என்கிறார். அவரது அன்புக்கவியுள்ளம் கண்டு நொந்தேன் நான். நான்கு விமர்சனங்களிலேயே முகநூல் கவிஞர்களின் கொந்தளிப்புகளை சரியாக சுட்டியுள்ளேன் என நினைக்கிறேன். கீழே வாசக்கண்மணிகள் காணுவது அய்யாச் சிபிச்செல்வன் கவிதை எழுதும் தருணமாய் எழுதியதற்கான விமர்சனம்.


கவிதை எழுதுவதும் ஈமுக் கோழி வளர்ப்பும்

கவிதை எழுதும் தருணமாக அய்யா சிபிச்செல்வன் உளறியது எனக்கு ஏகக் கொண்டாட்டத்தை இனிப்புடன் வழங்கிவிட்டது. திரைப்பட பில்டப்புகளை நினைவில் கொண்டுவந்தது. அந்த பில்டப்புகளையே நான் காமெடி நடிகர்களுக்கு இசையென வழங்கும் டொய்ங் என்ற சப்தமாக மாற்றியிருக்கிறேன்.

கவிதையியல் கவிதை எழுதும் தருணம் என்ற தலைப்பில் கவிஞரென்று சொல்லிக்கொள்ளும் கவிஞரய்யா சிபிச்செல்வன் தனக்கு கவிதை வந்த அனுபவத்தை அருமையாக எழுதியிருந்தார். படித்தேன். அவரின் உரையாடல் முழுக்க தான் கவிதைதான் எழுதப்போவதாக நம்பிக்கொண்டு வீட்டுக்கு வேகமெடுத்து ஓடியுள்ளார். நல்ல வேளை தடுக்கிவிழவில்லை. கொதிநிலையில் வெடிக்க தயாராக இருக்கும் பிரஷர் குக்கர் போல அவரது உடல். மனம் ஏனைய உடல் உறுப்புகள் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது.

இது போன்ற விஸ்தீரணங்களை கவிஞரய்யா கவிதை எழுதும் தருணத்தில் அடைந்திருக்கிறார். இதை வியாக்கியானமாக அவரை எழுதத் தூண்டியது எது என்பதை ஒரு சிற்றறிவுக்கெட்டிய உளவியல் சார்ந்த கேள்வி பதில்களாக முன்வைத்துப் பார்க்கலாம்.


1 ஒரு கவிதையை எழுத இவ்வளவு அவஸ்தையா?

                          ஆம் கவிப்பொழுது சும்மாயில்லை. ஆண்டு, அகன்று செரித்து உள் நுழைந்து குமுறிவரும் கொந்தளித்து ஒருக்களித்து புரண்டு படுத்து, கோட்டுவாய் கோட்டை உடைக்கும் ஒரு பயங்கர ஆற்றல். அது எல்லோருக்கும் வந்துவிடாது, இத்தகு அவஸ்தைகளோடு எழுதினால்தான் அது கவிதை. அதுவும் அது கவிதையாகத்தான் இருக்கும் என முடிவு கட்டிவிடலாம்.

2 அப்படியென்றால் நோய் முற்றி உயிருக்குப் போராடும் நோயாளி எழுதித்தரும் மாத்திரைச் சீட்டும் கவிதைகளா?

                           ஆமாஞ்சாமி. அது கவிதையேதான் அப்புறம் என்ன சும்மாவா. அட்ய்ஹு கவிததான். ஆனால் மருந்துகளுக்கிடையில் தனிமை வெறுமை கொலுசு, மழை என்ற நாலைந்து வரிகள் இருக்கவேண்டும். இருந்தால் சாகும்போதும் கவியெழுதிய கவிச்சித்தர் என அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்து முடித்து விடலாம்.

3 கவிதை எழுத கவிஞரய்யாவுக்கு, அதன் இனந்தெரியாத மனவலி, பரபரப்பு, பிரஷர் குக்கர் கொதிநிலை, தடுமாற்றம், வருடங்களாகத் தடைபட்டிருந்த தருணம், குட்டிப் போட்ட பூனையாக அவஸ்தைப்பட்ட மனம் இதையெல்லாம் கவிதை எழுதுவதற்கு தேவையா?

                             ஆம். ஒரு கவிதை எழுதுவதும் பிள்ளை பெறுவதும் ஒன்றுதான் என கவிஞர்களே சொல்லுகிறார்கள், இத்தகைய அவஸ்தை வந்தால் ஏதேனும் ஒரு புத்தகத்தை…ஆனால் நீங்கள் பல்லாயிரக்கணக்காக வருடங்களாய் தேடும் ஒரு புத்தகமாய் இருந்தால் இன்னும் விரிவாக கவிதை வரும்..

ஒரு நபர், அவரைக் கவிஞரய்யா என்றே சொல்லலாம். அத்தைகைய ஒரு கவிஞரய்யா தனது நண்பரைத் தேடி ஒரு சிற்றூருக்கு வருகிறார். பேருந்து விரைந்துகொண்டிருக்கும்போது அவருக்கு இனம் புரிந்த ஒரு அவஸ்தை வருகிறது. பேருந்தோ மிக மெதுவாய் போய்க்கொண்டிருக்கிறது. கவிஞரய்யாவுக்கு உடல் சூடாகத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பிடித்தால் கொல்லன் காய்ச்சிய இரும்பைப் போல கொதிக்கத் தொடங்கிவிடும். சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிற்றூருக்கு செல்லும் ஒரே ஒரு பேருந்தாகையால் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது. ஒரு தொந்தி நிறைந்த வயிற்றுக்காரன் கவிஞரய்யாவின் தோளில் தனது எடையை இறக்குகிறான். ஏற்கனவே கூடியிருந்த அழுத்தம் இப்பொழுது கவிஞரய்யாவுக்கு இன்னும் கூடியது, இப்படியே இருந்தால் பிரளயம்தான் என நினைத்து அங்கும் இங்கும் பார்க்கிறார். தனது கவனத்தை பின்னோக்கிச் செலுத்துகிறார். தனது கவிதைத் தொகுதிக்கு வெளியூரில் மஞ்சள் சால்வை போர்த்தி கைதட்டிய நினைவுகள் வருகிறது. ஆனாலும் கவிஞரய்யா மனம் பதட்டத்துடன் நிகழ்காலத்திற்கு அவரை இழுத்து வருகிறது. மனம் தாளமுடியாத சுமையும் அழுத்தமும் அதிகமாகிப் போய்க்கொண்டேயிருக்க தாங்க முடியாத அவஸ்தையுடன் எழுந்து நிற்க, ஆள் எழுந்துவிட்டார் என அருகில் இருந்த முதியவர் அமர்ந்துவிட்டார். கவிஞரய்யாவோ அவஸ்தையை சற்று தள்ளிப் போடத்தான் எழுந்து நின்றார். ஆனாலும் பரவாயில்லை நிற்பது சற்று லகுவாக இருக்கிறது என நினைத்த அடுத்த விநாடியில் சகலமும் பறிபோகும் ஒரு மனநிலைக்கு கவிஞரய்யா வசமிழந்தார், கால்களை இறுக்கி கோணாலாக்கி எவ்வளவோ பொருத்தப்பாடுகளில் நின்று கொண்டிருக்க ஒரு வழியாக பேருந்து வேகத்தடையை தடையேதும் இல்லாமல் கடக்க தூக்கிப் போடப்பட்ட பேருந்துக்குள்ளிருந்த கவிஞரய்யாவுக்கு உள்ளே ஏதோ வெடித்துவிடுவதைப் போல அவஸ்தை கூடியபடியே வந்தது. வேகமாக பேருந்தை நிறுத்தச் சொல்ல நடத்துனர் இந்தா வந்துருச்சுங்க என்க கவிஞரய்யா கடுங்கோபத்தோடு அவரைப் பார்த்தார். இடை நிறுத்தம் வரவும் கவிஞரய்யா வேகமாக இறங்க நினைத்தும் அங்கேயும் போட்டி நிலவியதால் மனம் இன்னவெனத் தெரிந்த நடுக்கத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழித்து ஒரு வழியாக இறங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்த பால்ய நண்பன் நின்றுகொண்டிருந்தான். கவிஞரய்யா என ஆசை பொங்க நண்பர் அழைக்க  கவிஞரய்யாவோ எதுவும் பேசும் மனநிலையாது வா என கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார், அவரது மனம் இப்பொழுது கிட்டத்தட்ட பிரஷர் குக்கரைப் போலவே இருந்தது. விழுந்தடித்துக்கொண்டு வந்த கவிஞரய்யா வேகமாக கழிவறைக்குள் வந்தார். கதவு தாழிடுதல் கூட இரண்டு நிமிடங்கழித்தே நடந்தது. கொதி நிலை அவஸ்தை பிரஷர் குக்கர் எல்லாம் இலகுவாக இளகியது மனப்பதட்டம் தணிந்தது. கவிஞரய்யாவின் காகிதங்களில் ஈமுக்கோழிகள் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. மிக மெதுவாக வெளியே வந்தார். கவிதை குறித்து சிந்தித்தார்.



No comments:

Post a Comment