Thursday 4 October 2012

முகநூல் கவிஞரய்யா வா.மணிகண்டனுக்கு திறந்த கடிதம்






அய்யா வா.மணிகண்டனாரே....என்னை தடை செய்யக் காரணம் என்ன... உங்களது கவிதை ஒன்றை விமர்சித்தேன்…அதுதானே காரணம். அப்படியென்றால் அதைத் தொடர்ந்து செய்வேன். விமர்சனத்தை வைத்து கேள்வி கேட்டதற்கு, நீங்கள், என் கவிதையை நானே ஏன் பேசவேண்டும், நான்தான்  மற்றவர்களது கவிதைகளை விமர்சிப்பேன், சுட்டுவேன் என்று பதிலே சொல்லாமல் சென்றீர்கள். 

ஒரு கவிதை குறித்து சிறிய  கேள்வி கேட்டதற்கு ஓடியும் ஒளிந்ததோடு எந்தப் பதிலையும் சொல்லாமல் கழுத்தறுக்காதே என ஒரு வரியையும் வைத்தீர்கள்…அய்யா கேள்வி கேட்டவனை கண்டால் எரிச்சலுற்று…ச்சீ.போ…என முகத்தைத் திருப்புவதோடு. எழுத்தில் சிறிய ஒரு நக்கலைக் கூட அனுமதிக்காத நீங்கள் எந்த முகத்தை வைத்து பேப்பர்காரரைத் தப்பாய் நினைத்தேன், தவிட்டுக் குருவியை ரசித்தேன் என ஒரு பல்லவியைப் பாடி நல்லவராய்க் காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள்.

அய்யா இதுவெல்லாம் உங்களைப் போன்ற முகப்புத்தக கவிஞர்களுக்கு வாய்க்கும் வழக்கம் தான்.. பேப்பர்கடைக்காரர் மட்டுமல்ல இங்கு எழுத்தாளனே கறை படிந்த பற்களையும், கலைந்த முடியுமாய்த்தான் திரிகிறான். இன்னும் சொல்லப் போனால் ஒரு பிச்சைக்காரனுக்கு அஞ்சு ரூபா போட்டேன் என பெருமையை எழுதிவிட்டு கூடவே அதற்கு குற்றவுணர்ச்சி அடைந்ததாக ஒரு புளுகு. அந்தப் புளுகையும் எழுதி ஒரு புளாங்கிகதம்.

கவிதைக்குத்தான் முக்கல் முணகல் என்று கட்டுரைகளைப் பார்த்தேன். முதல் இரண்டு வரிகளிலேயே ததிங்கணத்தோம்…ததாங்குணத்தோம்...இந்த லட்சணத்தில் என் கவிதையைப் பற்ரி நான் பேசமாட்டேன்…மேதாவிகளிடம் பேசமாட்டேன்…மூதேவிகளிடம் பேசமாட்டேன்…ம்..போ…க்கா….

என்று பற்கள் நடுவே பெருவிரலை வைத்து வக்கணை…ஏனய்யா…முகப்புத்தகத்தில் எழுதி கவிஞரானவர் எனச் சொன்னதும் உங்களுக்கு அவ்வளவு எரிச்சல் எதற்கு வருகிறது…வருத்தமய்யா…உங்களுக்கு லைக்குகளைப் போட்டு சாமியே சரணம் என்பவர்கள் முகப்புத்தக ரசிகர்கள் இதைச் சொல்லுவதில் என்ன சங்கடம். ஆனால் ஒன்று புரிகிறதய்யா ஒரு நூலை வெளியிட்டு அதையும் இருவர் பெயரில் அச்சடித்து பிழைப்பை ஓட்டும் கவிஞர்களுக்கு கேள்வி என்றாலே எட்டிக்கசப்புதான்….

இந்த அழகில் தவிட்டுக் குருவிக்கெல்லாம் சோறு தண்ணீர் கொடுப்பதோடு அவைகளுக்கு இரக்கம் காட்டி தாலாட்டு வேறு…நான் முதலில் சொன்னதுதான் சக மனிதனின் மண்டையை அடித்துப் பொளந்துவிட்டு….

அந்த புல் நுனியில் பனித்துளி…
ஆஹா
கருணையின் குருவி
ஓஹோ
மரத்தில் முலைத்திருக்கும் மலர்கள்
அடடாஆஆ,..
காக்காய்களை வெறுக்காதீர்கள்
ச்சூ..சூ…லாலி….


என்னய்யா இது…  

வாசகக்கண்மணிகளே… தீர்த்தமுனி செய்தது வேறெதுவும் இல்லை. ஒரு சில விமர்சனங்கள்,. ஒரு கேள்வி அவ்வளவுதான்...உடனே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆபாசமாகவோ வசைகளையோ நான் பேசவில்லை. முடிந்தால் வா.மா சுட்டிக்காட்டட்டும். உங்கள் கட்டுரையின் வடிவ நேர்த்தி ஏன் பல்லைக் காட்டுகிறதென்றேன்... உடனே தடை... முகத்தைக் காட்டிப் பேசும் உண்மையானவர்களுக்கும், அவருக்கு சரணம் போடும் பக்தர்களுக்கும்தான் மணிகண்ட சாமி அருளும். சாமியே
அய்யப்பா
அய்யப்பா சாமியே
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
மணிகண்ட வாசனே
சாமி சரணம்…


கிருஷ்ணபிரபு அய்யா கண்டுகொள்ளுங்கள் கவிஞரய்யாவின் பொறுமையை....

No comments:

Post a Comment