Monday 1 October 2012

நவீன கவிதையிலிருந்து தப்பிக்க… அய்யாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பாலற்ற மாந்தர்களுக்கும்…..





கவிதையில் கனவு என்பது நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையுமல்ல உணர்ச்சியுமல்ல.ஆனால் அது கனவு சாராத தடையற்ற தொடர்புகள் ஆகும். கனவில் உள்ள தொடர்புகள் தனிப்பட்டவை. கனவௌ காண்பவரது தனிப்பட்ட வாழ்வின் அடிப்படையில்தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கனவுக்குரிய ரகசிய விதி கனவுச்செயல் ஆகும். கவிதையில் உள்ள அதர்க்கம் கனவில் உள்ளதைப் போன்று இருக்கிறது. அதன் படிமங்களை உணர்ச்சி சார்ந்த விதிகளால் விளக்க முடிகிறது. ஆனால் கவிதை உணர்ச்சியானது நெறிப்படுத்தப்பட்ட ஒன்று. இது சமூக தன்முனைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. கவிதையில் உள்ல கூட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட கவிஞரின் உள அமைப்பே. கனவு காண்பவரோ அதற்கேயுரிய படிமங்களுக்குள்ளேபுற யதார்த்ததை தவிர்த்துவிட்டு இருக்கிறார். இதே போன்று கவிதையைப் படிப்பவர் அதன் சொற்களுக்குள்ளேயே ஆழ்ந்து விடுகிறார். உதாரணமாக  முகப்புத்தக கவிஞர்களது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீயற்ற பொழுதில் கரையும் பட்சிகள்

எப்போதும் நீ அமரும் இடத்தில்
ஒரு ஒற்றைப் பூ மலர்ந்திருக்கிறது.
அந்தப் பூவின் தலைகோதி விடுகின்றன
எனது விரல்கள்.
விரையும் வாகனத்தின் எதிரே
மரங்கள் பின்னோக்கி நகர்கின்றன.
இருபுறமும் அடர்ந்த இருளின்
நடுவே உனது வனம் விரிந்திருக்கிறது.
எதிர்காற்றில் எழுந்துவரும்
புழுதியில் ஒற்றைப்பூ
பறந்து மறைகிறது.
பல்லாயிர மைல் பயணத்தில்
தனியே
கரைந்துகொண்டே பறக்கிறது
இந்தப்பறவை.
-நிலாரசிகன்.

இதைக் கவிதையென்று முதலில் சொல்ல வைப்பதே இதன் வடிவ அமைப்புதான். அதனால் வாசகர்கள் வடிவத்தை அதன் தன்மையை உதறிவிடவேண்டும் என்பது உங்களுக்குச் சொல்லாமலேயே புரிந்திருக்கும். சம்பந்தப்பட்ட கவிஞரய்யாவுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அவரது மனதில் தோன்றிய ஒரு வரியை எழுத நினைத்திருக்கிறார். ஆனால் தோன்றித்தான் எழுத வேண்டும் என்பது இல்லை. காலையில் எழுந்ததும் சிலர் குளம்பியோ, இல்லை இலை வடி நீரோ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார். இதுவும் ஒரு வகையில் குடிப்பழக்கமே. அவரிடம் அன்றாட  தன்னுணர்ச்சிகள் தன்னை வெளிக்காட்ட உதவும் ஒரு வடிவமாக இவ்வடிவத்தைக் காண்கிறார். உண்மையில் அவரது சுய இருப்பை அறிவித்துக்கொள்ளவே இவை உதவுகிறது.


எப்போதும் நீ அமரும் இடத்தில்
ஒரு ஒற்றைப் பூ…

இங்கு கவனிக்க வேண்டும் ஒரு என்று சொல்லிவிட்டு ஒற்றை என்று சொல்வதற்கு காரணமென்ன மேற்கண்ட கவிதைக்கு கவிதை வடிவத்தை சற்று அழுத்தவே…வேறொன்றும் இல்லை. இதை இன்னும் இலக்கியத்தரமாக்கத் தெரிந்த மொழி நுட்ப வல்லுனன் இந்த வரிகளை எப்படி ஒழுங்கு செய்வான்

நீ அமர்வதற்கான
இடத்தில்
தனிமை
அமர்ந்து
இருக்கிறது…

ஆனால் கவிஞரய்யா தன்னைக் கவிஞரென்று நம்பி கவிதைக்கான  வடிவத்தை மட்டும் நம்பி வார்த்தைகளை வாரியிறைத்து,  கவிதையில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார். அதிலும் கவிஞரய்யா ஒரு என்று தொடங்கி பின்  ஒற்றைப் பூ என்று அழுத்தி இரு ஒருக்களை வைத்ததோடு நில்லாது, மறுபடியும் அந்தப் பூவின் என கதைவடிவத்தைத் தொடங்குகிறார். அதிலும் உனது எனது விரல்கள் உனது வனம் என சுட்டவும் செய்கிறார். மேலும் பறக்கிறது பறவை என எளிதாகவே முடிக்கும் இடத்தில் இந்தப்பறவை என்றே முடிக்கிறார்…இது ஏதோ நீ காற்று நான் மரம்…நீ வானம் நான் நிலா என்பதை ஒத்ததாக எடுத்துக்கொடுக்கும் ஒரு வகையினமாக அமைகிறது. இதில் கவிதைக்கான கூறுகள் என்னவென ஒரு வாசகன உணர்ந்து கொள்ள  நினைத்து அவரிடம் உரையாடியதில் அவர் சொன்னது…..

”கவிதையின் ஒவ்வொரு வரியின் இடையிலும் மண்ணில் விழுந்துகொண்டிருக்கின்றன நீர்த்துளிகள்...கண்ணீர்த்துளிகள். இக்கவிதை, கண்ணீருக்கானது.”

கவிஞரய்யா இதை கவிதையென்று அழுத்திக்கூறுவதுடன் இதில் அவர் உணர்ந்தது நீர்த்துளிகள் என்கிறார், பின் மனம் அதில் சமாதானமாகாமல் கண்ணீர்த் துளிகள் என்கிறார்…இங்கும் சந்தேகம் வந்து அதைக் கவிதை என்றும் மறுபடியும் கண்ணீருக்கானது என்றும் முடிக்கிறார். முகப்புத்தக் கவிஞர் இவ்வரிகளை தேர்ந்த மொழி வல்லுனரிடத்தில் அளிக்கும் பட்சத்தில் கவிதைக்கு உபயோகப்படும் வரிகளை அவர் தரவிரக்கம் செய்வதோடு முதலில் செய்யும் வேலை கவிதைக்கான தலைப்பை அடிப்பதிலிருந்து தொடங்கும்.


1 comment:

  1. இந்தக் கவிதைக் காட்சி இரவில் நிகழ்வது. //விரையும் வாகனத்தின் எதிரே/ மரங்கள் பின்னோக்கி நகர்கின்றன// என்பதில் இருந்து இதை அறியலாம்.

    //எப்போதும் நீ அமரும் இடம்// என்றதினால், பாடப்பட்டவர் நுவலுநரின் அருகமர்ந்து பயணிப்பது அதற்குமுந்திய வழக்கம் என்று விளங்குகிறது. இப்போது அவ்விடத்தில், //ஒரு ஒற்றைப்பூ மலர்ந்திருக்கிறது//. அறிமுகப் படுத்துகையில் ‘ஒரு ஒற்றைப்பூ’ என்று குறிப்பிடுவதும், அதுவும் இவரைப் பிரிய நேர்கிற இடத்தில் ‘ஒற்றைப்பூ’ என்று ‘ஒரு’ நீக்கி விளம்புவதும் இவரது மொழித் தெளிவைக் காட்டுகிறது. பாடப்பட்டவர் விட்டுச் சென்ற எச்சம் அது என்று உணர்த்துவதோடு, ‘பூ’ என்றதினால் அது ‘வாசனை’ என்றும் பொருள்படுகிறது. (‘வாசனை’க்கு உரிய தத்துவார்த்தமும் கொள்ளப்பட வேண்டும்). இப்படியே, ‘இருள்’, ‘எதிர்காற்று’, ‘புழுதி’ என இவற்றிற்கெல்லாம் பொருள்விரித்துக் காணலாம். //பல்லாயிர மைல் பயணத்தில்// என்றதினால் அது வலசை போதலையும், தொன்மரபு தொட்டு என்னும் பொருளையும் தருகிறது. //கரைந்துகொண்டே பறக்கிறது/ இந்தப் பறவை// என்னும் முடிபில் ‘பறவை’ இதயத்திற்கும் ஆகி வருகிறது.

    இரவில் (அதாவது புணர்ச்சிக்கான பொழுதில்) நிகழும் இப் பிரிவின் கரைதல், அந்தோ, இரங்கத் தக்கதாக இருக்கிறது!

    இது எனது வாசிப்பு.

    ReplyDelete