Wednesday 31 October 2012

கண்ணீருடன் விடை பெறுகிறேன்.





வாசகக் கண்மணிகளுக்கும். என் உயிரினும் மேலான கவிச் செல்லங்களுக்கும்.

மொகநூல் வழியா உருண்டோடி நாளைய உலகை ஆளக் காத்திருக்கிற முகநூல் கவிஞருங்களுக்கு. நான் மறுபடியும் போறேன்.  உங்க கொடுமைய என்னால தாங்கமுடியலை.வாங்கன்னு கூப்பிடுறீங்க. வந்து பேசுங்க தீர்த்தமுனி கேட்கிறோம்னு சொல்லுறீக.வந்தா பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம். பேஸ்தடிச்சுப் போயி கிடக்கிறீக. நான் போறேன்னு சொன்னேன் போய்த்தொலையுறேன்னும் சொன்னேன். கேட்கலை.

உங்ககூடப் பேச அன்பா இருக்குது உங்க விமர்சனத்த பண்ணுங்க நான் என் காது கொடுத்துக் கேட்கிறேன் பேசுங்க முனி... பேசுங்க தீர்த்த முனின்னு சொன்ன அய்யா நேசமித்ரன் மித்ரா கிட்ட நீங்க கவிஞருங்களா அய்யான்னு கேட்டா,  என்னைக் கவிஞருன்னு அண்ணன் ராசு மற்றும் நண்பர் மாணிக்கம் அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா இன்னும் உற்றார் உறவினர் மற்றவர்களும் சொல்லுறாங்கன்னு சொன்னாரு. என்னைக் கவிஞருன்னு  என் ஒண்ணுவிட்டச் சித்தப்பா சொன்னாருங்கிறாருங்க. இந்தக்கொடுமைக்கு நான் மருந்தக் குடிச்சுத்தான் சாகணும்.

சரி இருக்கட்டும் வெமர்சனமும் அதுவும் ஒண்ணுதான். இதுமட்டுமா சொன்னாரு அதுக்கும் ஒரு படி மேல போயி அய்யா மித்ரனார் நான் தனிமனித தாக்குதல்கள் அற்ற ஆரோக்கியமான பிரதி மீதான விமர்சனங்கள் (ஒற்றை வார்த்தை நிராகரிப்புகள் அல்ல ) கவிதையை ,கவிஞனை செழுமைப் படுத்தும் என்று நம்புகிறவனாகவே இன்னும் இருக்கிறேன்ன்னு எடுத்துத்தொடுத்து, நீங்க வாங்க நாம கவிதையப் பேசலாம் வெமர்சனம் பேசலாம்னு சொன்னாரு.சொன்னவரு சொன்னவருதான். அய்யாவ ஆளையே காங்கலை. எங்க போனாரோ.அவரு பக்கத்துல போயிப் பார்த்தா தஸ்யூஸ்ங்கிறாரு.கிஸ்மிஸ்ங்கிறாரு.நான் கேட்ட கேள்விக்கு பதிலக் காணோம். ஆனா காமெடியா இருக்கு. இடையில அமானுஷ்யம் நீ செய்யுறத உருப்படியான வெமர்சனம் இல்லேம்பாரு ஆனா அவரப் பண்ணு வெமர்சனம் ஏய் இவரப்பண்ணு வெமர்சனம். அய்யாஆஆஆஅ.....

போதும் சாமி நீங்க உங்களுக்குள்ளேயே பொலம்பிட்டுக் கிடங்க.நான் போறேன். இனி எந்த வாசகக் கண்மணியோ இல்லை கவிச் செல்லங்களோ கூப்பிட்டா நான் வரமாட்டேன்,. போறேன். போறேன்னு சொல்லாதீங்க போயிட்டு வாரேன்னு சொல்லுங்கன்னு நீங்க சொல்லுறது என் காதுல ஏறுது. சரி இப்பப் போறேன்.

ஆனா போறதுக்குக் காரணம் சொல்லணும்ல சொல்லாட்டத்தான் பயமான்னு கேட்டுப்போடுறாக.ஆனா நான் கேள்வி கேட்டு பதில் வராம அவங்க இருக்கிறதுக்கு பேரு அஞ்சா நெஞ்சுரம். கவுத வரிச்சரம். இதுவரைக்கும் உரைக்கிற மாதிரி ஒரு ஆளும் பதில் சொல்லலை. அதனால போறேன். போறதுக்கு காரணம் இதுதான் மொகநூலார்களே.மொகநூல் கவிஞருங்களே.

உங்களுக்குன்னு என் சொந்தச் செலவுல பதிமூணு நாளுல கவுத எழுதுவது எப்பிடின்னு ஒரு பொத்தகத்த எழுதப் போறேன்.அதுக்கு நீங்க விடைகொடுக்கணும்.வெமர்சன வடை இப்போதைக்கு இருக்காது.நான் கிளம்புறேன் கிளம்புறேன். உங்க ஆஷை முகத்தையெல்லாம் மொகநூல்ல கண்டு ருசிச்சுச் சாப்பிட்டேன். அந்த ஆஷை வதன முக அழகையெல்லாம் பொத்தகத் திருவிழாவுல உத்து உத்துப் பார்ப்பேன்னு நினைக்கிறேன்.நீங்கதான் ஆளுக்கொரு அழகு சிந்துறமாதிரி,பேனாப் புடிச்சு விட்டத்தப்பார்த்தமாதிரி, நெட்டுக்கப் படுத்து, கொட்டத்தப் பார்த்தமாதிரி,மரக்கட்டைல தோதா உடம்பவளைச்சு உத்துப்பார்க்கிற மாதிரி டிசைன் டிசைன்னா உங்க  கொழுத்த வதனங்களைப் பதிச்சிருக்கீகளே. மறக்கமுடியுமா.

மறக்காம பொத்தகத் திருவெழாவுக்கு வந்திருங்க.இவகதான் அவக அவகதான் இவகன்னு எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டச் சொல்லி உங்ககிட்ட கைச் சாத்து வாங்கணும். பல்லத்தனையும் தெரியுற மாதிரி ஹி ஹின்னு கைச்சாத்தப் போடுங்க. கைவலிக்கும்னு நினைக்கிறவக ரப்பர் ஸ்டாம்பு கொண்டுவாங்க.ஆனா மொகநூல் கவிஞருங்களே அய்யா நீங்க கவிஞருங்களா அய்யா ன்னு யாராவது கேட்டா மட்டும் தலைதெறிக்க ஓடிப்புடாதீக.எனக்கு பெரிய சங்கடமாப் போயிரும் ஆமா, பார்த்திக்கிடுங்க..

தீர்த்தமுனியின் வெமர்சனக்கடை பட்டப்பகல் பதினாலு மணிக்கு சாத்தப்படும்.வேகமா ஓடிவந்து நான் எழுதுனது கவுத.நான் கவிஞருன்னு சொல்லுறவக லிஸ்டப் போட்டுச் சொல்லுங்க. மைண்ட்ல வச்சிக்கிறேன்.

கடைய மூடிட்டா இனி தொறக்க மாட்டேன். ஏற்கனவே நான் சொன்ன மாதிரி  மூணு மாசம் கழிச்சுதான்  வருவேன் பிப்ரவரி 2013 ல. சரிங்களா மொகநூல் கவிஞருங்களே.
மூட்டையக்கட்டுறேன்.


ஜிஜ்ஜினக்கா சின்னக் கிளி
சிரிக்கும் பேஸ்புக் கிளி
மேடையிலே ஓடி வந்தார் கவுத பாட
கவுத பாடும் வேலையிலே கம்பெடுத்து
தீர்த்தமுனி விட்டுப்போட்டு ஓடிப்போனார் கூட்டத்தோட

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல
நான் எழுதுறேன் எழுதுறேன் கவுத வல்ல

……..ஙே… அஹ் அஹ் அஹ்
……..ஙே…. இஹிக் இஹிக் இஹிக்…

வணக்கம் வந்தனம் நமஸ்காரம் ஸ்வாகதம் கும்புடுறேன் சாமி.

No comments:

Post a Comment