Tuesday 2 October 2012

கவிஞர்- ஆத்மார்த்தியின் வருடும் சலங்கை - யை விமர்சித்து






வருடும் சலங்கை



ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள் அலாதியானவை.
தட்டப்படாத கதவுகளுடனான ஓரிடம்.
தடையிலா மின்வசதி இன்னபிற அவஸ்யம்.
ஒளிபொங்குகிற படுக்கயறையின் சுற்றுச்சுவர்களில்
முலைப்பால் வெண்மையோ அல்லது ஐஸ்க்ரீம் நிறமோ பூசப்பட்டிருப்பது உத்தமம்.
சுற்றிலும் கேமிரா சுழலும் வண்ணம் வாகான மையத்தில்
கட்டில் இடமாற்றப்படுகிறது முக்கியம்.
கடிகாரம்,சுவர்ப்படம், எனத் தேவையற்ற எந்தப் பொருளும்
இல்லாமல் பார்த்துக்கொள்வது சூட்ஷுமம்.
அறையுள் இணைந்தாற்போல்
மேற்கத்திய பாணிக் கழிவறை சௌகர்யம்.

எளிதில் அகற்றிவிடக்கூடிய உள்ளாடைகள்
அணிவித்துக்கொண்டு காத்திருக்கிற அவன்
அவஸ்தையினூடே புன்னகைக்கிறான்.
அவளோ பல அர்த்தங்களை மென்றுகொண்டிருக்கிறாள்.
கேமிராவைக் கையாள்பவன்
அவர்கள் இருவருக்கும்
எந்த வரிசைப்படி என்னென்ன செய்யவேண்டும் என்ற "கதை"யை விவரிக்கிறான்.
அதனைக் கவனமெடுத்துக் கேட்டுக்கொள்கிறார்கள் இருவரும்.
"என்னென்ன செய்யக் கூடாது" என்பதை
மெல்லிய குரலில் கண்டிப்புடன்.
அவள் நினைவுபடுத்துகிறாள்
தன் தலையசைப்பின் மூலமாக
அங்கே நடக்கப்போவதன்
முழுப்பொறுப்பையும் தானேற்பதாகக்
கூறுகிறான் கேமிராக்காரன்.

முந்தைய தினத்தின் பிற்பகுதியிலிருந்தே
உபவாசம் இருந்துவந்திருக்கிற அவள்
சீக்கிரம் துவங்கச் சொல்லுகிறாள்.
அவளது நாக்கின் மத்தியில்
"வருடும் சலங்கை"யை அணியவேண்டியிருப்பதை
ஞாபகப்படுத்துகிறான் கேமிராக்காரன்
மன்னிப்புக் கோரியபடியே
அவள் சலங்கையை அணிந்துகொள்கிறாள்.
தம் உடைபொத்தான்கள்
எளிதில் திறந்துகொள்கின்றனவா என
சரியார்க்கின்றனர் இருவரும்.
கேமிராவைக் கையாள்பவன் தன்
கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறான்.
அவர்கள் இருவரும்
அந்த அறைக்குள் நுழைகின்றனர்.
விளக்குகள் உயிர்பெறுகின்றன.

ஆத்மார்த்தி




இது உரையை விளக்கி, ஆத்மார்த்தி அய்யா அவர்களின் கவிதை விளக்கக் குறிப்புகளை சற்று இடம் நீக்கிப்,  பொருத்திய விளைவை கீழே காணலாம்.

ஒரு நீலப்படத்துக்கான முன் தயாரிப்புக்கள் எப்போதும் விஷேசமானவை. அதற்கு தட்டப்படாத கதவுகளைக்கொண்ட ஓரு மறைவிடம், மற்றும் தடையிலா மின்வசதி இன்னபிற கட்டாயம். ஒளிபொங்குகிற படுக்கயறையின் சுற்றுச்சுவர்களில் முலைப்பால் வெண்மையோ அல்லது ஐஸ்க்ரீம் நிறமோ பூசப்பட்டிருப்பது நல்லது. சுற்றிலும் கேமிரா சுழலும் வண்ணம் தோதான  மையத்தில் கட்டில் இடமாற்றப்படுவது அவசியம். கடிகாரம், சுவர்ப்படம், எனத் தேவையற்ற எந்தப் பொருளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது இடத்தைக் காட்டிக்கொடுக்க உதவி செய்யாது. அறையுள் இணைந்தாற்போல் மேற்கத்திய பாணிக் கழிவறை சௌகர்யம்.

இப்போது எளிதில் அகற்றிவிடக்கூடிய உள்ளாடைகள்  அணிவித்துக்கொண்டு காத்திருக்கிற அவன்  சொல்லமுடியாத அவஸ்தையினூடே புன்னகைக்கிறான். அவளோ பல அர்த்தங்களை மென்றுகொண்டிருக்கிறாள். கேமிராவைக் கையாள்பவன்  அவர்கள் இருவருக்கும் எந்த வரிசைப்படி என்னென்ன செய்யவேண்டும் என்ற "கதை"யை விவரிக்கிறான். அதனைக் கவனமெடுத்துக் கேட்டுக்கொள்கிறார்கள் இருவரும். "என்னென்ன செய்யக் கூடாது" என்பதை  மெல்லிய குரலில் கண்டிப்புடன். அவள் நினைவுபடுத்துகிறாள் தன் தலையசைப்பின் மூலமாக அங்கே நடக்கப்போவதன் முழுப்பொறுப்பையும் தானேற்பதாகக் கூறுகிறான் கேமிராக்காரன். முந்தைய தினத்தின் பிற்பகுதியிலிருந்தே உபவாசம் இருந்து வந்திருக்கிற அவள் சீக்கிரம் துவங்கச் சொல்லுகிறாள். அவளது நாக்கின் மத்தியில் "வருடும் சலங்கை"யை அணியவேண்டியிருப்பதை ஞாபகப்படுத்துகிறான் கேமிராக்காரன். மன்னிப்புக் கோரியபடியே அவள் சலங்கையை அணிந்துகொள்கிறாள். தம் உடைபொத்தான்கள் எளிதில் திறந்துகொள்கின்றனவா என சரியார்க்கின்றனர் இருவரும். கேமிராவைக் கையாள்பவன் தன் கட்டைவிரலை உயர்த்திக்காட்டுகிறான். அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் நுழைகின்றனர். விளக்குகள் உயிர்பெறுகின்றன. இயக்குனர் கேமராவைச் சுழல விடுகிறார். 

(டெயில்- பீஸ்)அறைக்கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும் பெண் துணுக்குற்றாள். இயக்குனன் திசை மறந்தான். நடிகன் குறி மறந்தான். சப்தம் அறையைத் துளைத்தபடி சென்றது. அறைக்கு வெளியே செவ்வாடையுடுத்தி அக்குளை மழித்தபடி நித்யானந்தா கதவைத் திற காற்று வரட்டுமென்றார். காற்று வந்தது. )



ஒரு நீலப்படத்தை உன்னிப்பாகக் கவனித்து திரைக்குறிப்புகளை துண்டித்து இட்டதன் மூலம் இதை கவிதை எனும் வடிவத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார் கவிஞரய்யா.
……………………………........................
…………......................................................
………………………………....................
………………………………....................
 ………………………………...................
………………………………....................

இந்த வடிவத்தில் இருந்ததை

…….......
………….
……………………..
………………………………..
…………….
…………………………..
…………………

இந்த வடிவத்தில் கொண்டு வந்த வினைகள் இவை. இது முழுக்க முழுக்க மேற்கத்திய பாணிகளை பின்பற்றி விளக்கம் சொல்லிற ஒரு மரபு.
இதோ ஒரு உதாரணத்திற்காக……

நான் வாழ்ந்த தெருவில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அம்மரத்தை தினமும் கடக்கையில் நான் கவனிப்பேன் ஒரு மஞ்சள் பறவை கடந்து போகும்.

இது நேரிட்டையான ஒரு வார்த்தை அமைப்பு. இதை கவிதையாக்கம் பெறச் செய்ய வேண்டியது, மேற்குறித்த கவிஞரய்யாவின் பாணியைப் பின்பற்றி நாமும் துண்டித்து ஒட்டுவதோடு திரைக்குறிப்புகளையும் சற்றுத் தூவுவோம்.


அடர் பச்சை இலைகளை
வெளிர் ஓரத்தில் கத்தரித்தபடி
மரம்
வேம்பென்றழைப்பதில்
மாறும் நிறம்
கருத்த நிழலையும்
பட்டைகளையும்
வெயில் தாக்காத நிறமாய்
தன் நெடிய உடலைச் சுமந்தபடி

நீள அகலமும்
வெயிலைப் பருகும் தன்மையும்
புழுதியுடனும்
தன்னை விரித்துக்கொண்ட தெரு

நெடிய கால்களால் அலுப்புற்று

அதைச்
சரிந்து கடக்கும்போது
நீலத்தைத்
திணித்த வண்ணத்தைப் புசித்தவாறு
கிடக்கும்
மேகத்தை விழியசைய
பார்த்தவாறு கடப்பேன்
தெருவை

கடந்து போகும்
இறகில் மஞ்சள் வண்ணச் சாயம்
நீலத்தையும் நிழலையும் இணைக்கும்
கால்களை செங்குத்தாக மடக்கிக் கடக்கும்
பறவையை
மஞ்சற்
பறவை

இவ்விடத்தில் இதை கவிதையாக முடிக்க ஒரு இருதிச் சொல் தேவைப்படுகிறது அதை இவ்வாறு இட்டுவைப்போம்

வானம் மஞ்சளைச் சூடிக்கொண்டது.

இவ்வகைக் கவிதை அமைப்புகள் சலித்த மனநிலையுடனும், கவனப்படுத்துகிறோம் என்கிற உற்சாகத்துடனும் கவிஞர்களால் எழுதப்படுகிறது. எழுதி முடித்ததும் கவிதையை சீராக ஒழுங்குபடுத்துவதில் குறிப்புக்களாய் விரியும் மரபைக் கொண்டது.

வாசகர்கள் தாங்கள் நாளும் பார்க்கும் ஒன்றை இதன் மூலம் குறிப்புகள் எழுதி தங்களது கவிதைத் தன்மையை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் கவிதை… முக்காட்டைப் போட்டுக்கொண்டு இருட்டுக்குள் ஓட்டமெடுக்கும். குழந்தைகல், பெண்கள், ரோட்டோரத்தில் படுத்துக்கிடக்கும் நாய், வாலை சுருட்டும் பூனை…ஏன், இன்னும் சாலையைக் கடக்கும் பேருந்தையும் விவரித்து எழுதலாம்

கனத்துத் தடித்த
நிறத்தால்
நீண்ட செவ்வகம் படுத்துக்கிடந்து
சக்கரக்கருமை நான்கு திசைகளையும்
வெறித்து நகர
சந்துகள் முனை மழுங்கி
வழிவிட்டது

தகரக்குரலோடு
நீண்ட விளக்குகளையுடை தெருவில்
டீக்கடைகள் பரப்பி வைத்திருக்கும்
உருண்டை வடிவ நேர்த்தியையொத்த போண்டாக்களை கடந்து
வட்டவடிவ
உளுந்த வடைகளில்
இமை கனத்த தூசியைப் படரவிட்டு
மனிதர்கள்
முகஞ்சுருங்க
மலைத்து வரும்
மலைப்பாம்பு…

வாசகர்களே இங்கு போண்டா உளுந்த வடை என்பது கவிதை வடிவங்களில் நீங்கள் இதுவரை வாசிக்காத காரணத்தால் இதை நீங்கள் காமெடி என்ன எண்ணலா, ஆனால் அவ்விடத்தில் போண்டாவுக்குப் பதில் உருண்டை வடிவ கோளத்தையும், வட்டவடிவ கருந்துளையையும் என இட்டுப் பார்த்தல் உங்களுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும். இது கவிதையை விரித்து விளங்கங்களை மேற்கத்திய பாணியைத் திணித்து வீங்க வைக்கும் ஒரு விளக்கக் குறிப்பு. இக்கவிதையை வேல் கண்ணன் அய்யா பக்கத்தில் கண்டேன். அவருக்கு என் மகிழ்ச்சி கலந்த அன்பான நன்றிகள்.



சிந்திப்பதைப் போல ஒழுக்கம் கெட்ட காரியம் வேறெதும் இல்லை வாசகர்களே…..

- தீர்த்தமுனி

6 comments:

  1. உங்களின் பார்வை இது , உங்களின் களம் இது,
    புகுந்து விளையாடுங்கள்,அது உங்களின் சுதந்திரம்.
    ஆத்மார்த்தியின் கவிதையில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டது தான் அதனை உயிர் பெறவைக்கிறது. அதனை எப்படி சொல்லியிருந்தாலும் அது தகும். கவிதையின் இறுதி வரி "விளக்குகள் உயிர்பெறுகின்றன" உயிர் பெற்ற உடன் என்ன நடக்கும் என்பதை எல்லோராலும் அனுமானிக்க முடியும் தான். ஆனாலும் ஒரு இனம் புரியாத வலி அந்த அனுமானித்தலுடன் நம் மனதில் ஓடத் துவங்கினாலோ அதே மன நிலையுடன் இந்த கவிதையை மறுபடியும் வாசித்தாலோ வாசிக்க நினைத்தாலோ அதுவே கவிதைக்கு போதுமானது என்பது என் பார்வை. அப்படித்தான் இந்த கவிதையை நான் மறுபடியும் வாசிக்க தொடங்கினேன். கவிதை எழுதிய விதம் குறித்து மட்டுமில்லாமல் கவிதை சொல்லும் விஷயத்தை பற்றி பேசினால் உங்களின் கட்டுரை மேலும் சிறப்படையும் என்பது எனது கருத்து. நன்றி

    ReplyDelete
  2. ராஸ்கல்! இதுதான் தீர்த்தமுனிக்கு என் பாராட்டு. என்னால் சிரித்து முடியவில்லை.

    ReplyDelete
  3. அய்யா வேல்கண்ணன் கவிதை பற்றி இன்னும் சொல்ல என்ன இருக்கிறது...இதற்கும் மேலாகச் சொல்ல வேண்டுமானால். குப்பை.

    ReplyDelete
  4. அய்யா ராஜசுந்தராஜன்....உண்மையிலேயே என்னைப் புகழ்கிறீர்களா என்ன...அய்யா விமர்சன நோக்கம் தவறாக இருந்தால் தாராளமாய் சுட்டலாம் திருத்திக்கொள்வேன் இது ரசனை வழித் திரனாய்வு இல்லையென்பது நீங்கள் அறிந்ததே....

    ReplyDelete
  5. அன்ப்போடு உரிமை எடுத்துத் திட்டினேன். என்றால் புகழ்ச்சிதானே? தொடருங்கள். உங்கள் கருத்தூட்டங்கள், இடுகைகள் என் முகப்புத்தகத்தில் இருந்து மொத்தமாய் மறைந்து போயின. என்ன காரணமோ?

    ReplyDelete
  6. ராஜ சுந்தர ராஜன் அய்யா...என்னை முடக்க சில ஐடித்துறை அடலேறுகள் தங்களது விஞ்ஞானக் கண்கொண்டு எனைப் பொசுக்க நினைத்தார்கள். ஆனால் விஞ்ஞானத்தின் மூன்றாம் கண்ணோடு எனக்கு தொடர்புள்ளதால் விலக்கி மறுபிறப்பு எடுத்து வந்திருக்கிறேன். அய்யா நீங்கள் ராஸ்கல் எனத் திட்டியதில் நான் உவகை அடைந்தேன். எனக்கும் உங்கள் ப்ரியத்தில் இடம் உண்டென்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. எனது விமர்சனப் பணியை நான் தொடர்கிறேன். சரி இருப்பின் மகிழ்ச்சி, குறை இருப்பீன் நேரடியாகச் சுட்டி கருணை காட்டாது விமர்சியுங்கள்.

    ReplyDelete